சூரியாள்

Friday, January 17, 2014
முந்திச் சேலையில் ஓர் நூல்
முந்திச் சேலையில் ஓர் நூல்
இன்று பாட்டியாயிருந்த தங்கம் ஒரு காலத்தில் நிஜமாகவே தங்கமாக இருந்தாள். கருப்புத் தங்கம். காதல் வந்த கதையும் கல்யாணம் முடிந்த கதையும் புதிதல்ல. விழுந்து விழுந்து அவளைக் காதலித்தவன் அவளை விட உயர் சாதியாய்> இருவரும் ஒரு சாதியாகவே இருக்கஉட்பிரிவுகளில் கொஞ்சம் உசத்தி> தாழ்த்தி. காதல் எல்லாவற்றையும் மறைத்தது. அவன் நீட்டிய கையைப் பிடித்துக் கொண்டு ஓடினாள். கோவிலில் மாலை மாத்தி> வீட்டுக்குத் தெரியாம வேற ஊருல வீடு புடிச்சு> ஆளுக்கொரு வேலைக்குப் போய்> அலுத்து வேலை விட்டுத் திரும்பும் போது> எஞ்சியிருந்த காதலைக் சுவைத்து அலுத்த காலங்கள் அவை.
            சுவைத்து அனுபவித்த காதலின் அடையாளமாய் உண்டாகினாள். அவள் அனுபவித்த எல்லா மகிழ்வும்> வயிற்றில் சுகமான கனமாக வளர்ந்து கொண்டே இருந்தது.
             அவள் அம்மா வீட்டிலிருந்து. மெல்ல அசைந்து நெருங்கி வந்தார்கள். பிள்ளைப் பேறுவிற்கு அம்மா வீட்டிற்கு அனுப்புவதற்கு கணவனும் சம்மதிக்க போவதென்று முடிவாயிற்று.
            இடுப்பு வலி கண்டு பெண் பிள்ளை பெத்து ஆய்ந்து ஓய்ந்து கட்டிலில் கிடந்த நேரம்தான் தலை கிறுகிறுக்க செய்தி வந்தது. பக்கத்து வீட்டு பொன்னாத்தாதான் வந்த மூச்சு வாங்க நேரமில்லாது சொன்னாள்.
            சின்னாயி உம் புருசன் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். நீ என்னடான்னா பிள்ளை பெத்த சந்தோசத்தில கிடக்கிற அங்க உன் வீட்டுக்காரன் புது மாப்பிள்ளை குஷியில இருக்கான்.
            தொண்டைக்குழியிலிருந்து வார்த்தையும் வராமல்> படுக்கையில் இருந்து விருட்டென்று எழும்பவும் முடியாமல்> உடலும் மனசும் எதிரும் புதிருமாக அவள் உடல் எழும்புவதும்> மனம் அழுத்துவதுமாக இருக்க> தள்ளாடி வீழ்ந்தாள். அவள் முந்திச்சேலை நூல் விரல்களில் சுத்தி சுத்தி அறுபட்டது
பிள்ளை கிடந்தது மறந்து போனது.
கால்கள் இழுத்துக் கொண்டு போக> பொன்னாத்தாள் பிடித்து தடுத்து நிறுத்தினாள்.
ஆத்தா! இந்த நேரத்துல எப்படி போட்டது போட்டபடி கிளம்புற? இந்நேரம் உன் வீட்டுக்காரா் ஊருக்கு பஸ்சும் கிடையாது. எல்லாம் முடிஞ்சிட்டது. கல்யாணம் முடிஞ்சி விருந்து சாப்பாட்டுக்குப் போயாச்சு. உன் வீட்டுக்காரன் வீட்டுல நம்ம ஊரு பெரியவங்கள வைச்சு  பேசி போவோம்.
இடிந்து உட்கார்ந்தாள் அவள்.
என்ன சொல்லி அழுவாள்?
முடிந்து விட்டதா? எல்லாம் முடிந்து விட்டதா?
எப்படி  இன்னொருத்திக்கு தாலி கட்டினான். இனி அவளிடமிருந்து இவனை பிரிக்கனுமா
அப்படிப் பிரிந்தாலும் தன்னோடு ஒட்டுமா?
வீட்டில் பெத்தவங்க மூஞ்சில எப்படி முழிக்க?
யாரு கூடவும் பேசுவது தவிர்த்தாள்.
செய்தி வந்த போது> உடைந்து அழுதவள் வெள்ளிக்கிழமை நானே பார்த்துக்கிறேன் என்று பிள்ளையைத் தூக்கிகிட்டுக் கிளம்பினாள்.
அவளப் பெத்தவங்க எதுவும் செய்ய முடியாம இப்படி தறுதலையை நம்பி கை நிறைய பிள்ளைய வைச்சுக்கிட்டு இருக்கியேன்னு புலம்பினாங்க.
எல்லாத் தப்பும் அவளே செய்தது போல> குற்ற உணர்ச்சியின் குவியலுக்குள் அவளை மூழ்கடித்தார்கள்.
பேருந்தில் தன்னந்தனியாக கைப்பிள்ளையுடன் ஏறிப் போனாள். அவள் போய்ச் சேர்ந்து பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் ஊர் சனம் அவளைப் பார்த்து உச்சுக் கொட்டினர். சிலர் வருத்தப்பட்டார்கள். சிலர் திரும்பிக் கொண்டனர்.
வாசலில் நின்று கூவி அழைத்தாள். உடைந்து விடக் கூடாது என்று இறுமாப்பாய் இருந்ததில் குரல் கட்டையாகி அதட்டும் குரலாய் வெளி வந்தது.
அவனும்> புதுப் பொண்டாட்டியும் வெளி வந்தாங்க. பிள்ளையை மண்ணில் கிடத்தினாள்.
ஏன்யா. இப்படி ஒரு துரோகம் செஞ்ச?
இப்பொழுது அவனது தாய் தந்தையர் எல்லாரும் வந்து சேர்ந்திட்டாங்க. புரிந்தது> இவள் இருந்தவரைக்கும் வீடு தேடி வராத சொந்தங்கள் இப்பொழுது அவளை வளைத்து நின்றன.
பதில் இனி தேவையில்லை.
பிள்ளை மேல சத்தியமா உனக்குப் பிள்ளை வாரிசே இல்லாம போகும்> என் வயிறு எரிஞ்சு அழுகிறேனே.
அழுவடா அழுவ. ரெண்டு பேரும் அழுவீங்க. என் வாழ்க்கையப் பத்தி யோசிக்காம செஞ்சுட்டீங்கள்ல...  எந்த சுகமும் இல்லாம போக.
குனிந்து ரோட்டில் கிடந்த மணலை அள்ளி தூவி எறிந்தாள்.முந்திச் சேலை நூலை அறுத்து எறிந்து  வீசி விட்டு  கை நெட்டி முறிஞ்சு சாபத்தை உறுதியாக்கி விட்டு> பிள்ளையைத் தூக்கி நடந்தாள் கால் போன போக்கில் கையில் ஒரு சிறு துணிப்பையுமிருந்தது. பெத்தவங்ககிட்டையும் போகிற யோசனையை விட்டிருந்தா
கிராமத்தின் பேருந்து நிலையத்திற்கு வந்தவள். மதுரை போகும் பேருந்தில் ஏறினாள். பெரியார் வந்து இறங்கும் போது இனி பிழைப்பது எப்படி? என்ற யோசனையோடு நடக்க> ஒரு வயசான பாட்டி பலாப்பழத்தை சுளை பிரித்தெடுத்து வித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். தன் கையில் இருநூறு ரூபாய் இருந்தது.
மொத்தப் பழக்கடை இருக்கிற தெருவுக்குள் நடந்தே போய்ச் சேர்ந்தாள். ஒரு பலாப்பழத்தை வாங்கி> கூடை ஒன்றும் வாங்கி> நடைபாதையில் யாருக்கும் போட்டியாக இல்லாத இடமென்று ஒரு மர நிழலைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தாள். பிள்ளையை நிழலில் விரிச்சுப் படுக்கப் போட்டு பழத்தைக் கீறினாள்.
இனிப்புச் சுளைகள் வெளி வந்தன. வாங்கி வந்திருந்த இலையை விரித்து அடுக்கினாள்விரட்டி வந்த வெயிலை முந்திச்  சேலையிட்டு மறைக்கவும் குழந்தை கையால் தட்டி விடுவதுமாக இருந்தது
பசிக்கின்ற போது ஒன்றிரண்டு சுளைகளைத் தின்று முடிக்க> விரித்து வைத்திருந்த சுளைகள் இரவு ஏழு மணி போல வித்துத் தீர்ந்திருந்தன.
ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய பழம் எண்பது ரூபாய் தந்திருந்தது. சாப்பிட்டு பிளாட்பாரத்திலேயே படுத்துக் கொண்டாள். தங்குமிடம் பற்றி யோசனை வந்தது.
இப்பவெல்லாம் எந்த இடத்திலேயும் வாழப் பழகிட்டிருந்தா வியாபாரம் சுணக்கமில்லாம போகத் தொடங்கிட்டது. லட்சுமின்னு பிள்ளைக்குப் பேர் வச்சா அவ கூட வெயிலில் துணி போர்த்து உறங்க பழகிக்கொண்டா
காலம் பறந்தது. ஒரு சேட்டு வீட்டில் வேலை கேட்க> அவர்கள் தங்குமிடத்தோடு வேலை தந்து விட
இதற்கு மேல் என்ன வேண்டும்? போதும் போதுமெனும் அளவுக்கு உழைக்கத் தொடங்கினாள்.
நிம்மதியா காலங்கள் கழிந்து கொண்டேயிருந்தன.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு.
ஒரு நாள் தற்செயலாக> அதே பேருந்து நிலையத்தில் தனது கணவனையும் அவனது புது மனைவியையும் சேர்த்துப் பார்த்த போது> மிதிக்கக் கூடாததை மிதித்து விட்டது போல் கால்கள் தடுமாறின. நேராக நெருங்கி வந்தான் அவன்.
! புள்ள உன் கோபம் என் மேல பலிச்சுடுச்சு. சந்தோசமா. இப்ப இவளுக்கு அஞ்சு வருஷமாகியும் பிள்ளையே இல்லை> உன் சாபம் பலிச்சுடுச்சு. நான் என்ன பண்ணுவேன்? நீ போனப்புறம் எங்க வீட்டு ஆளுக எல்லாம் வந்து சாதி சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு என்னை இவளுக்குக் கட்டி வைச்சிட்டாங்க. சொல்லிக் கொண்டே போனான் கதைகளை. அவளோ இறுகிப் போனபடி நின்றிருந்தாள். முந்திச் சேலையின் நூல் விரல்களில் அறுபட்டுக் கொண்டே இருந்தது.
அவன் பேசிய அரை மணி நேரக் கதையில் ஒட்டு மொத்தமாய் அவளுக்குப் பிடிச்சு> மனசில் பதிஞ்ச ஒரே வசனம் உன் சாபம் பலித்து விட்டது என்பது தான். கொண்டாடிய மனதோடு வீடு வந்து சேர்ந்தாள். இவளுக்கென்று தனியாக ஒரு வாடகை வீடு அமர்த்தியிருந்தாள்.
முதல் நாளிலிருந்த மகிழ்ச்சி மறுநாள் காணாமல் போயிருந்தது. அவன் கூட இருந்த அந்தப் பெண்ணின் முகம்> அதிலிருந்த சோகம் சங்கடப்படுத்தியது.
வாழ்க்கை பறி போகிற துக்கம் என்னை விட யார் அனுபவித்து விட முடியும்? அதே துக்கத்துள் ஒரு பெண் என்னாலா கிடக்கிறாள்
சோறு தண்ணி கொல்லாமல் மனது கிடந்தது துடிச்சுக்கிட்டே இருந்தது.
மூன்றாம் நாள் வீட்டு வாசலில் இருவர் ஆணும்> பெண்ணுமாய் இவளைப் பார்க்க வந்திருந்தனர். முகம் எங்கோ? எப்பொழுதோ? பார்த்திருக்கின்றோம் என்று சொல்ல> தடுமாறினாள்.
நான் உன் வீட்டுக்காரனோட அப்பேன். ஆத்தா...> ஊரிலிருந்து வருகின்றோம். அவனுக்கு குழந்தையே இல்லாமல் போய் விட்டது உன் சாபம்தான்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க நீ தான் மனமிறங்கி வந்து துந்நூறு பூசி மடி நிரப்பி அனுப்பி விடணும் அவளை> செய்வீயா தாயி இப்ப எங்க குலசாமியே நீதான்> வா.. தாயி கொஞ்சம் கருணை வையம்மா
போங்க> நாளைக்கு வாரேன்.
பெரியவங்க கெஞ்சுறது சங்கடமாக இருக்கவே> முதலில் அப்புறப்படுத்தினாள்.
இப்பவும் பையனுக்கு குழந்தை இல்லைன்னுதான் பேசறாங்க சனம். தன் குழந்தைய பாசமா வாடியம்மா பேத்தின்னு சொல்லலையேன்னு கவலை வந்த போதும்
இனி இவனிடம் இவர்களிடம் எதிர்பார்க்க என்ன இருக்கு? எல்லாவற்றையும் தனியாகவே வாழ்ந்து முடிந்து விட்ட பிறகு
இனிமே எந்த இடத்திலேயும் ஒட்டிக் கொள்ள முடியாத உறவாக அவளை மொத்தமாக ஆக்கிவிட்டிருச்சே சனங்க
தூத்தெறி! மனம் காறி உமிழ்ந்தது. வறண்டு போன தொண்டையிலிருந்த ஈரப்பதமோ அற்றுப் போயிருந்தது.
மறுநாள் வியாபாரத்திற்குப் போகாமல் கணவன் ஊருக்குப் பேருந்தில் ஏறினாள்.
ஊர் மொத்தமும் அவளை வேடிக்கை பார்த்தது. இதில் வருத்தம் இல்லை> ஏமாந்தவள் என்ற சலிப்பு இல்லை> வாசலில் நின்றாள். வீடு மொத்தமும் வாசல் வரை வந்து உள்ளே வா…” என்றது.
துந்நூறும் தேங்கா பழமும் கொண்டு வாங்க... குரல் இறுக்கமாக ஒலிக்கவே> அவள் கேட்டதை எடுத்து வர பறந்தனர்.
பொண்ணோட அம்மாக்காரி பெண்ணையும்அவள் வீட்டுக்காரனையும் சேர்த்து வந்து வாசலில் நிறுத்தினாள். பெண் இவளை நிமிர்ந்து பார்த்து> குனிந்து கொண்டாள். கைகள் வணங்கின.
துந்நூறை எடுத்தாள். தலையை ஓங்கி அடித்து நெற்றியின் புருவ மத்தியில் வைத்து அழுத்திகண்களை இறுக மூடினாள். தேங்காய் பழம் வெத்தலை பாக்கு வர முந்தியை நீட்டு என்றாள்.
இடது கை ஓரமாக முந்தியை இழுத்து விரித்தாள். பழம் பாக்கு எல்லாம் வைத்து தன் முந்தானையில் முடிந்து வைத்த ஒத்த ரூபாயை சேர்த்து வைத்தாள். காசோடு அவள் முந்தி நூலும் வந்து சேர்ந்தது. முந்தியை மூடி அவள் கைகளில் தந்தாள்.
மீண்டும் நெற்றியில் துந்நூறை அழுத்தி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் நிற்க வைத்திருந்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டு விடுவிடுவென்று நடந்து கொண்டே இருந்தாள்.
            இதயெல்லாம் மறந்துமதுரை விட்டு கோவில்பட்டி மில்லில் வேலை பார்க்கத் தொடங்கி இருந்த போதுமீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உறவுக்காரரைப் பார்த்ததில்வீட்டுக்காரருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டாள்.
            இருளும் வெப்பமும் பாதிக்க முடியாத அந்த கட்டிடத்திற்குள் பஞ்சு கிழி பட்டு கிழி பட்டு நூலாகிக் கொண்டிருந்தது யாருடைய முந்திச் சேலை ஆவதெற்கென்றோ
மகள் காதலிக்கும் செய்தியோடு வந்து சேர்ந்தாள் அவளிடம்
சேலை நூலை அறுக்காமல் முடிச்சிட்டுக் கொண்டிருந்தன விரல்கள்


நன்றி கல்கி
posted by mathibama.blogspot.com @ 1/17/2014 08:26:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates