|
Tuesday, December 13, 2005 |
அதிசயமாகும் நடுகற்கள் |
அதிசயமாகும் நடுகற்கள்
தூரத்து அரியணை சறுக்கல்கள் சொட்டாங்கல்லோடு மேலே போன போதும் கூட்டிச் சேர்த்து உள்ளங்கைக்குள் அடக்கிட முடிந்தது.
சட்டங்களின் சாயும் முற்கள் பறிக்கும் ரோஜாக்களோடு கூடவே வர கிள்ளி எறிந்து மாலை தொடுத்தோம்
பணங்களின் ஏற்ற இறக்கத்தில் சோழி உருட்டி ஏணி ஏறி அடித்த நொண்டியில் பழம் வைத்து அபிமன்யு வெளியேற மறந்த பத்ம வியூகம் சொற்களில் உடைத்து சோறும் படைத்தோம்
கழுவையில் நழுவும் மீனாய் தீவிரவாத தலைபற்றி தரையில் உரசி கொதிக்கும் புளியில் குழம்பும் ஆக்கினோம்
வாள் சொருகிய இடுப்புகளோடு வீரம் பேசிய மீசைகள் எதிரில் வர பூமத்திய ரேகையாய் நம் உலகங்களிரண்டாய் பிரியும்
என் உலகம் நீ நிறைக்கப் பார்த்த உன் உலகத்தினடியில் மறைக்கப் பார்க்க பேசிப் பேசி ஓய்கின்றேன் பெண்ணியமென்று நீ பெயரிட்டு போகின்றாய்
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில் |
posted by mathibama.blogspot.com @ 12/13/2005 09:01:00 pm |
|
1 Comments: |
-
என் உலகம் நீ நிறைக்கப் பார்த்த உன் உலகத்தினடியில் மறைக்கப் பார்க்க பேசிப் பேசி ஓய்கின்றேன் பெண்ணியமென்று நீ பெயரிட்டு போகின்றாய்
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்
ம்.. நல்லதொரு கவிதை.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
என் உலகம்
நீ நிறைக்கப் பார்த்த
உன் உலகத்தினடியில்
மறைக்கப் பார்க்க
பேசிப் பேசி ஓய்கின்றேன்
பெண்ணியமென்று
நீ பெயரிட்டு போகின்றாய்
நீ நிறுவப் பார்த்த
உன் உலகத்திற்கு
நான் இடுகின்ற நடுகல்
நாளை அதிசயமாகும்
உனதும் எனதுமற்ற
பொது உலகில்
ம்.. நல்லதொரு கவிதை.