|
Tuesday, December 20, 2005 |
லண்டன் பெண்கள் சந்திப்பு |
லண்டனில் நடைபெற்ற 24 வது பெண்கள் சந்திப்பு அக்டோபர் மாதம் 15ம் தேதி லண்டனில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ள லண்டன் வந்து சேர்ந்திருந்தேன் . அரங்கின் உள்ளே நுழைந்த போது மங்கையர்கரசி அவர்களால் கருத்துரை நிகழ்த்தப் பட்டுக்கொண்டிருந்தது. 20 பேர் கூடியிருந்தனர் ..உரையின் முடிவில் மீண்டும் தற்போது வந்து சேர்ந்து கொண்டவர்களுக்காக மீண்டும் ஒரு சுய அறிமுகம் நடந்தது. வெறும் பெயர்களாக மட்டுமே இணையம் வழி அறியப் பட்டிருந்தவர்கள் முதன் முறையாக உருவங்களோடு உடலங்களோடு அறிமுகமானோம்.தொடர்ந்து எல்லா சந்திப்புகளிலும் கலந்து கொண்டிருக்கும் இன்பராணி , பெண்கள் சந்திப்பின் தோற்றம் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் முக்கியமானவை . புகலிடத் தமிழர்களின் 6வது இலக்கிய சந்திப்பின்( சுசீந்திரன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட) போது , . அந்த நாட்களில் சேர்ந்து இருக்க கிடைக்க சந்தர்ப்பங்களில் பெண்கள் ஒட்டு மொத்த நிகழ்விலிருந்து விலகி, மெல்ல மௌனங்கள் உடைபட்ட சந்தர்ப்பங்களில் பெண் சார்ந்த வாழ்வியல் சிக்கல்களை, தான் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பேச நேர்ந்த போது அவர்கள் தங்களுக்கான தனிமை சிலவற்றை பகிரவும் பேசவும் தேவையென தீர்மானிக்க அதுவே பெண்கள் சந்திப்பின் துவக்கத்திற்கு காரணமாகவும் இருந்து விட்டது. தொடர்ந்து பல சந்திப்புகள் இலக்கிய சந்திப்புக்கு முன்னாலோ பின்னாலோ நடத்தப் பட்டிருகின்றது. பெண்கள் சந்திப்புகளில் கலந்து கொண்ட பெண்கள் அதே சூட்டோடு இலக்கிய சந்திப்புகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பின்னாளில் இரண்டு நிகழ்வுகளும் வேறு வேறு நாட்களில் திட்டமிடப் பட்டு விட்டதுஇது 24வது இலக்கிய சந்திப்பு. முதல் நிகழ்வாக சுனாமி தாக்குதல் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் உரை நிகழ்த்தினார் ஜெசிமா அவர்கள்.மட்டகளப்பு சூர்யா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த வாசுகி தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சனைகள் எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, பெண்ணியத்தின் அடிப்படை பிரச்சனைகள் தொடங்கி இன்றைய சிக்கல்கள் விசாரணைகள் என விரிந்து ஒரு பரந்த தளத்திற்கு இட்டுச் சென்றது .பெண்களும் ரோக்கியமும் எனும் தலைப்பில் மருத்துவர் கீதா அவர்கள் பேசிய பேச்சு மருத்துவ துறை சார்ந்த அறிவியல் விடயங்களை தனித் தமிழில் அதுவும் குழப்பமில்லாத எளிய நடையில் பேசியது நிறைவாக இருந்தது. எல்லாருக்கும் தெரிந்த விசயங்களாக இருந்த போதும் திரும்ப கேட்டல் என்பது புதிய கேள்விகளை சந்தேகங்களை எழுப்பியது பலருக்குள். சுவிஸிலிருந்து வந்திருந்த றஞ்சி பெண்கள் தொடர்பாக வருகின்ற இதழ்களை அறிமுகம் செய்து பேசினார். மீனா அவர்கள் இந்திய மருத்துவத்துறையில் பெண்கள் எனும் தலைப்பில் முத்துலெட்சுமி ரெட்டி பற்றிய உரை நிகழ்த்த புதிய விசயமாய் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.பெண்கள் சந்திப்பு 2005ம் ண்டு மலர் மல்லிகா அவர்கள் வெளியிட ஓவியை வாசுகி பெற்றுக் கொண்டார். மதிய உணவுக்குப் பின்னர் “இலக்கியத்தில் பெண்கள் எனும் எனது கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது நேரமின்மை காரணமாக முழுக் கட்டுரையும் வாசிக்க முடியாது போக தொடர்ந்து விவாதங்கள் நடந்தது . பெண் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க முயற்சிகள் இந்தியாவில் நடக்கின்றது அதுவும் எய்ட்ஸை ஒழிப்பதற்கு என்று வெளி நாட்டு சக்திகள் வழங்கும் பணத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ள எற்படுத்தும் வசதியாகவே இந்த சட்டபூர்வமாக்கும் முயற்சிகள் நடக்கின்றதே ஒழிய எந்த பாலியல் தொழிலாளர்களுக்கும் நல்லது செய்ய அல்ல என்று நான் பேசியதை தொடர்ந்து பிரான்சை சேர்ந்த விஜி வெளிநாடுகளில் எல்லாம் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப் பட்டிருக்கின்றது. அதனாலேயே அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கின்றது என்றும் விவாதத்தில் பேசினார். காலச் சுவடு உயிர்மை போன்ற சிற்றிதழ்கள் தொடர்ந்து பெண் எழுத்துக்களை திசை திருப்பி வரும் அரசியலை நான் பேசியதை குறிப்பிட்டு சுமதி ரூபன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் இப்படியே பேசி வருகின்றீர்கள். என்றும் கூறினார். . எல்லாவற்றுக்குமான பதிலாக என்னுரையில் , பெண் உடல் சார்ந்து பார்க்கப் பட்டுதான் காலம் காலமாக ஒடுக்கப் பட்டு வருகின்றாள் பெண் விடுதலை பற்றி பேசுகின்ற நாம் இன்னமும் உடல் சர்ந்து பெசுவது என்பது அந்த ணாதிக்க குரலை வழி மொழிவதாகவே அமையும் அதிலிருந்து விடுபட வேண்டும், பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு எதிரான ஒன்றாக அமையாமல் தனிமதத்துவம் சார்ந்த தீமையாக மாறுவதை, சுதந்திரம், உரிமை எனும் பேரில் அனுமதிக்க முடியாது எனும் பேச்சோடு நிறைவு செய்தேன். விவாதம் கிளப்பியவர்கள் திருப்தியில்லாமலேயே அடுத்த நிகழ்வுக்கு போனார்கள். நிர்மலா அவர்கள் அரசியலும், வன்முறையும் பற்றி உரை நிகழ்த்த இலங்கை அரசியல் சார்ந்த யதார்த்தத்தோடு இணைந்த பேச்சாக இருக்க கேட்போரையும் அதற்குள் இழுத்துப் போட்டிருந்தது. மறுநாள் றஜீதா அவர்களின் பெண்களும் , நாடகமேடையும் எனும் கட்டுரை நாடக மேடை தொடர்பாக புதிய விசயங்களை அறிமுகப் படுத்தியது , தேவ கௌரியின் “ பத்திரிகைகளில் பெண்கள் கருத்துருவாக்கம் செய்யும் முறைமை பற்றிய நோக்கு எனும் தலைப்பிலான பேச்சும் பல்வேறு தளங்களில் சுழன்று கனேசலிங்கம் யோகேஸ்வரியின் பிரச்சனை பற்றிய விவாதத்தில் வந்து சுழன்றது. அடுத்ததாக சுமதி ரூபனின் தனி நடிப்பு பெண்களின் பல்வேறு உணர்வுச் சிதைவுகளை தொட்டுச் செல்வதாக வடிவமைக்கப் பட்டிருந்த போதும், அவரது அளவுக் கதிகமான அழுகையூடான கதறலினால் சிதறிப் போனது தொலைக்காட்சி நாடகங்கள் அழுது அழுது வைப்பதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்தில் அந்த நிகழ்வும் கணி¢சமான தரவைப் பெற்று விட அழுது விட்டால் பெண்கள் உருகிப் போகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சியாய் கிப் போனது.உண்மையில் நடிப்பு என்பது உடல் மொழி கொண்டு பேசும் விசயம் . அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று எனக்குப் பட்டது.ஓவியங்கள் பற்றி ஓவியர்கள் அளித்த விளக்கமும் நாடகம் தொடர்பாக ரஜிதாவின் விளக்கமும் எனக்குள் நிறைய சாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.. மாற்றுக் கருத்துக்கள் நிறைய இருந்த போதும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது. பொதுவான இலக்கிய கூட்டங்களில் பெண்கள் தங்கள் பேச்சு அறிவு பூர்வமானதாக கருதப் படுமா எனும் தயக்கத்தோடு தவற விடுகின்ற தருணங்கள் இந்த கூட்டத்தில் இல்லை. நினைத்ததை பேசி தெளிவு பெற்றுக் கொள்ள கூடியதாய் இருந்தது. . அதே நேரம் குறிப்பிட்ட சில பெண்களை தவிர மற்றவர் பேசத் தயங்கும் சூழலும், அந்த ஒரு சில பெண்களின் திக்க மனோ பாவங்களால் விளைந்திருந்தது.. நிகழ்வுகள் புகைப்படம் தவிர ஒலி ஒளி வடிவமாக பதிவு செய்யப் படுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது என்று நான் என் பேச்சை பதிவு செய்து கொள்ள கேட்ட போது சொல்லப் பட்டது.. அமைப்புக்கு கட்டுப் பட்டு நான் அதை ஒத்துக் கொண்டாலும்,,இவ்வளவு உழைப்பும், செலவும் செய்யப் பட்டு பேசப் பட்ட விசயங்களின் பதிவுகள் மிக முக்கியம் அதை நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது தங்களது பொறுப்பில் எடுத்து செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்யப் படுமானால் பின்னாளில் அவை மிகப் பெரிய பொக்கிசமாக சில வேளை மாறக் கூடும்.. தேவதாசி குலத்தில் பிறந்து பாலியல் தொழிலை சட்ட விரோதமாக்க வேண்டும் என்று பாடு பட்ட முத்து லெட்சுமி பற்றியும் பேசி விட்டு, பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்றும் விவாதம் வைத்தது , முத்து லெட்சுமியின் இடத்தை அவர்கள் சரியாக உணரவில்லை என்றும் காட்டியது.பெண்கள் சந்திப்பு நிகழ்ந்து விடக் கூடாது எனும் எண்ணங்கள் சுற்றி வளைத்த போதும் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த இந்த நிகழ்வு மகிழ்வே. சிற்சில குறைகளை களைந்து இன்னும் வலிமையாக அடுத்த கூட்டம் அமையும் எனும் எதிர்பார்ப்போடு பிரிந்து வந்தேன் |
posted by mathibama.blogspot.com @ 12/20/2005 12:39:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment