ஜே.பி.நோபில் 7.10.10 அன்புடையீர் வணக்கம் கழுவேற்றப் பட்ட மீன்கள் என்ற தங்களின் நாவலை வாசித்தேன். எனது கருத்துக்களைப் பதிவு செய்கின்றேன் முதலில் குறை போன்று தோன்றுவதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.குமார் தீபா இருவரைப் பற்றிப் புனையப் படும் போதெல்லாம் அடுக்கி வரும் படிவங்கள் அலுப்பைத் தந்து வாசிப்பவனுக்குக் களைப்பு ஏற்படுத்துகிறது.பேசவும், எழுதவும் அரிய நுட்பமான மனச் சிக்கல்களை வழக்கத்துக்கு மாறான மொழி நடையில் வடித்திருந்தாலும், I feel the writer should have tightly reined in wild images. இனி நாவலின் சிறப்புகள் பற்றி ….. மனப் பிறழ்ச்சி என்பது மிக மிக சமீப காலங்களில் பேசப் படும் ஒன்று . மனச் சிக்கல்களை சொற்களால் எழுத்தால், சிந்தனையால் பகிர்ந்து கொள்வது எளிது அல்ல . ஆனாலும் படைப்பாளி அதற்கென மொழியைத் தேர்ந்துள்ளார். தமிழில் இந்தக் கருப் பொருளையும் , மொழி நடையையும் வேறு யாரும் பயன்படுத்தியதில்லை என நினைக்கின்றேன். பாரம்பரிய மனைவிமாராய் பாட்டி அம்மா ஆகியோர் இருந்திருக்கும் போது தன் முனைப்போடு குடும்பத்தைக் காப்பாற்றத் துணிச்சலோடு செயலாற்றும் தீபா ஆயிரமாண்டு கற்பிதங்களோடு வாழும் குமாருக்கு ஒரு கடக்க முடியாத கடலாகிப் போகின்றார். நவீன உலகில் பெரும்பாலான ஆண்கள் – இதை எழுதுபவன் உட்பட- மனச் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொரு ஆணும் இப்பிரச்சனையை எதிர் கொண்டு மேற்கொள்ளுதல் அவசியம் குமார் தீபா இருவரைப் பற்றி மட்டும் சொல்லப் படும் monotony கீழ்கண்ட கதைப்பகுதிகள் தணிக்கின்றன/ குறைக்கின்றன செல்வி, பாண்டி பற்றி விவரிப்பு, இளவயது திருவிழா, நாகலிங்க நினைவுகள் , முத்துலெட்சுமியின் கதை,பக்கத்து வீட்டுக் காரர் மூர்த்தியின் சாவு, பாண்டித் தெய்வத்தின் கதை , மாறி மாறி குலச் சாமிக் கொடை, விரத மீறல், சரஸ்வதிப் படத்தை உடைத்தல் அரண்மனை , இந்திராகாந்தி ஆகியோர் பற்றிய கற்பனை , குமார் தன்னை தனது சகோதரனாகக் காண்பித்தல் , தீபாவின் சுய இன்பம் சம்பந்தப் பட்ட புனைவுகள் நாவலின் நடை ஒரே பத்தியில் படர்க்கை தன்மையாவதற்கும் தன்மை படர்க்கையாவதற்கும் தமிழின் முன்னோடி நாவல்கள் இருப்பதாய் நான் வாசித்த அளவு தெரியவில்லை. ( நான் நகுலன் , சம்பத் , மௌனியை வாசித்ததில்லை) நாவலில் 17 18 ஆம் பக்கங்களில்” முதன் முதலில் ஆளுக்கொரு பிடி அரிசி…………………………………………….வெப்பத்திற்கு அர்த்தமாகாது தவித்திருந்தேன் “ என்பது ஒரே நீண்ட சொற்றொடர் திருவிழா காட்சிகளையும் தீபாவுக்கு நேர்ந்ததையும் படம் பிடிக்கிறது ஒரே இருப்பில் வாசிக்க முயலுவதை விட இடைவெளி விட்டுத் தொடர்வது நலம் . கவிதையை வாசிக்கும் நுட்பமும் தேவைப்படுகிறது. எல்லோருக்குமான நாவல் அல்ல. தேர்ந்த வாசகருக்கே உரியது “காலம் ஒரே வாசிப்பில் நமை வாழவிடுவதில்லையே. பன்முக வாசிப்பை கோரிய படி இருக்கின்ற காலம் நமக்கு முன்னால் நவரசமாய் வாழ்க்கையைத் தந்தபடி இருக்க முடிந்து விட்ட்தாய் நம்பியவர்ரிலிருந்து கிளைகள் புதிதாய் முளைக்கவே செய்க்கின்றன என்ற வரிகளோடு கடித்த்தை முடிக்கிறேன் வாழ்த்துக்கள் ஜே.பி.நோபில் போடிநாயக்கனூர்-625513 |
good sharing. thank u.