|
Saturday, February 27, 2010 |
அழகிய நாயகி அம்மாள் அரங்கு |
ிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வைத்து நடத்தப் பட்ட 2 நாள் கருத்தரங்கில் அழகிய நாயகி அம்மாள் அரங்கில் நடந்த நாவல் குறித்த விமரிசன அரங்கில் நான் வாசித்தளித்த கட்டுரை
ஹெர்மன் ஹெஸ்சே எழுதிய சித்தார்த்தன் , தமிழ் செல்வி எழுதிய அளம் , ஜெயமோஹன் எழுதிய கொற்றவை என்று இந்த மூன்று நாவல்களை என் விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்கின்றேன். எனது இந்த விமரிசனம் இரசனையின் பாற்பட்டது. விமரிசனம் என்பது சரி , பிழை சொல்வதல்ல ஒரு படைப்பை ஒட்டி அப்படைப்பாங்கள் சமூகத்தின் பிரதி பலிப்பாய் தந்து போகின்ற உணர்வுகளை , அதை செழுமைப் படுத்தும் நம் கருத்தாக்கங்களை தெரிவிப்பது. ஒப்பீட்டு ஆய்வுக்கென்று ஒரே கால கட்டத்துக்குட்பட்டதாக ஒரே தளத்திலுள்ளதாக இருந்தால் தான் சாத்தியம் என்ற வரையறைகள் தாண்டி மூன்று நாவல்களூக்கிடையேயும் ஒரு ஒப்பீடு என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்ததை இக்கட்டுரையில் தருகின்றேன்.
அளம் தொடர்ந்து பெண் எழுத்தாளர்கள் கவிதையோடு நின்று போய் விடுவது பெரும்பான்மையாய் இருந்திருந்த காலகட்டம் நகன்று கொண்டிருக்கின்ற நேரமிது அதில் தொடர்ந்து பல நாவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச்செல்வி இன்றைக்கு பேசப் பட வேண்டிய முக்கிய நாவலாசிரியர். அவர் எழுதிய ஒரு நாவலை வாசித்தால் எல்லா நாவலிலும் பிரதேசம் மாறினாலும் உள்ளீடு ஒரே சாயலில் வேறு வேறு வர்ணங்களில் இருப்பது தெரியும் . பிரதேச மொழியை அப்புவியின் வாழ்தலை இருப்பை நகர்தலை தோற்றுப் போதலின் வலியை இயலாமையின் யதார்த்தத்தை நம் முன் சொல்லிப் போகின்ற முயற்சி. அதில் தமிழ் செல்வியின் உழைப்பு உப்பளத் தொழில் சார்ந்த மொழியுனூடாக நாவலில் தடங்கலில்லாது பயணிப்பதிலிருந்து தெரிகிறது. முதற்பாதி இயற்கையோடு வாழ்வதைச் சொல்வதிலும் சரி உப்பள வாழ்வைச் சொல்வதிலும் சரி வாசிக்கின்ற ஒவ்வொருவரும் வியக்கின்ற விசயங்களைத் தானம் தருவதிலும் வென்று விடுகின்றது. மனிதனது அறியாமை வியப்பு. அப்படியான வியப்பைத் தந்து போகின்ற விசயங்கள் இருப்பதினாலேயே அவ்வியசங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. நிஜமான அதன் தேவையின் பொருட்டும், அது சரியான இடத்தில் சொல்லப் பட்டிருப்பதினாலேயே அவை முக்கியத்துவம் பெறுகின்றன ஆனால் நமக்கிடையே இருக்கின்ற பொதுப்புத்தியிலிருந்து சிக்காமல் போகின்ற ஒரு விசயம் அவரது எல்லா நாவலிலும் இழையோடக் காண்கின்றேன். இதுவரை நல்ல எழுத்து என்பதற்கு ஆண் வைத்திருக்கின்ற அளவீடுகளை அவர்களை விட சிறப்பாகச் செய்திருக்கின்ற படைப்பு அளம் இதை இதுவரை இருந்திருக்கின்ற படைப்புலகை ஒத்துக் கொள்ள வைக்கின்ற எழுத்து பெரும் பலம் தான் ஆனால் அதே நேரத்தில் இதுவரை இருந்த படைப்புலகை ஒத்துக் கொள்ள வைக்க பெண் அவளுக்கெதிராக இருக்கின்ற ஆண்களின் உலகை படியெடுத்து விடுகின்ற தவறும் நிகழ்ந்தே இருக்கிறது அளம் நாவலில். பெண் துயரங்களைக் கூறுகின்றேன் என்று பெண் இயலாமைகளை பெரிசு படுத்தி அதை இயல்பாக்கிப் போவதுவும் , ஆண்மீறல்களை வீரமாகச் சித்தரிக்கும் போக்கும் எதிர் எதிர் திசையிலிருந்தும் ஒரே மாதிரியானவைதான். இதில் ஒரு பாதியைத் தான் தமிழ் செல்வி நாவல்களும் கொண்டிருக்கின்றது
சித்தார்த்தன் நாவல் உணர்வுகளால் எழுதப் பட்டிருக்கின்ற புனைவு மொழி. அளத்திலிருந்து சித்தார்த்தன் வேறு படுகின்ற இடம் புனைவின் பாதைதான். சித்தார்த்தனும் கொற்றவையும் எதிர் புனைவு மொழி. ஏற்கனவே இருக்கின்ற புனைவுகளுக்கு மாற்று வாசிப்பை தந்து போகின்றது இந்த இரு நாவல்களும் ஆனால் வேறு வேறு இடங்களில். சித்தார்த்தன் எதிர் புனைவு மறுக்கவே முடியாத உணர்வு தளம் எதிர் புனைவில் எதையும் அந்நாவல் தட்டையாக்கிப் போகவில்லை. அளம் எப்படி பிரதேச மொழியை கையில் எடுத்ததோ அதே போல் சித்தார்த்தன் நாவல் தத்துவ உணர்தலுக்கான மொழியை கொண்டிருக்கின்றது. நிகழ் காலமாய் இல்லாது போயிருப்பதால் வேறு தளம் போல் தோற்ற மளிக்கின்றது.மொழியில் புதிய தரிசனங்களை சித்தார்த்தனும் கொற்றவையும் கோருகின்ற வித்தை ஆண்களாலேயே நிரப்பப் பட்டிருக்கின்ற மொழி. அதில் பெண்கள் அவர்களது நிகழ்த்துதல்கள், உயிரிகள் அல்ல. சித்தார்த்தன் எதிர் புனைவில் தத்துவ வாசிப்பை எல்லா இடத்திலும் உணர்த்துகிறது. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் போல ஆனால் கொற்றவையோ எதிர் புனைவில் மனித வாழ்வின் வாசிப்பை தட்டையாக்கிப் போகின்றது.
சித்தார்த்தனை வாசிக்கையில் எனக்குள் எழும்பிய கேள்விகள் இவை
• கடந்த காலத் தவறுகளை ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் சொல்லும் அழகிய சொல் அனுபவம். மனிதன் எதையுமே அழகுறச் சொல்லிப் பழகியவன். அதில் தவறுகள் மறைக்கப் படுகின்றன சாமர்த்தியமாக
• செய்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு விட்டு சாதனையாக்குவது ஒன்று செய்யாத தாறுகளால் பட்டியலிட முடியாது எதுவுமே செய்யப் படாததாய் காணாமல் போவது ஒன்று. எந்த தரிசனம் பரி நிர்வாணமாய் அர்த்தப் படப் போகின்றது.
• ஆண்களால் தவறுகளைத்தான் பாடமாகவும் வாழ்வாகவும் வாசிக்க முடியும் நேர்மையின் வெளியைச் சந்தித்தவர்கள் அதைப் பாடமெனச் சொல்பவர்களைக் கடந்து போவார்கள்
• இறுதியாக நீங்கள் சித்தார்த்தனாக மாறுவதற்கு கமலாக்கள் தேவை கமலாக்களோ பல சித்தார்த்தன்களின் பால்யத் தவறுகளை உறிஞ்சி விடும் பஞ்சுகளாக போதித்த கவுதமர்களை விட போதிக்காது வாழ்வதை பாடமாக்கும் கமலாக்களும் புத்தர்களே . போதிப்பவரையே புத்தராக வாசிக்கப் பழகி விட்ட உனக்கு கமலா புத்தராக தெரியப் போவதில்லை.
கொற்றவை வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான் தமிழர் வரலாறு வாசித்துக் கொண்டிருந்தேன். அந்நூல் தகவல்களாய் தந்து கொண்டிருந்ததை கொற்றவை புனைவாக்கியிருந்தது. புனைவின் நோக்கம் தகவல்களைச் சொல்வதாக மட்டுமிருந்தால் அந்த தகவல்களுக்கு நான் தமிழர் வரலாறேயே படித்து விட்டுப் போகலாமோ ? ஒன்று
மற்றொன்று புனைவின் தன்மை நமெக்கெல்லாம் தெரியும் கண்ணகி நெஞ்சை பிடுங்கி எரிய மதுரை எரிந்தது என்பது புனைவே அதிலும் சாமானியனுகே தெரியும் அந்த புனைவு அவளின் உச்ச கட்ட கோபத்தை ஆசிரியர் சொல்ல பயன் படுத்திய மொழி அதுவென்று. அதைப்போய் தட்டையாக்குகின்ற வேலையை செய்யத் தேவையில்லையே அப்புனைவை தட்டையாக்குகின்ற வேலையை கொற்றவை செய்திருக்கின்றது. யதார்த்தமோ புனைவோ ஒவ்வொரு காலமும் புனிதங்களின் பேரால் இருக்கும் போலித்தனங்களையும் மலினப் படுத்தல்களையும், சடங்குகளாய் மாறிப் போகின்ற விசயத்தையும் தட்டையாக்குவதே எல்லாக் காலத்தின் தேவையாகவும் இருக்க சாதாரனப் பெண் பாத்திரத்தை ஒரு உச்சத்திற்கு எடுத்துப் போன உன்னத புனைவை எதிர் புனைவில் தட்டையாக்குவது “ நான் தப்பு செய்திட்டேன்னு நிஜம் சொல்லிடேன்ல” என்று தப்பித்துக் கொல்வதற்கு ஒப்பானது தப்பு செய்திட்டேன்னு நிஜம் சொல்லவில்லை தவறுகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அவ்வளவுதான். நிஜம் சொன்னதாக அதில் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன் றுமில்லை
இன்னுமொன்று இன்னாவலிலும் பெண் பாத்திரங்கள் எல்லாம் அழுத வண்னமே இருக்கின்றன. வரலாற்று மொழி போர்வையில் தொலைக் காட்சித் தொடர் பெண்மணிகளாய் அழுது தொலைக்கும் தவற்றை நிகழ்த்தியிருப்பதை மறைத்திருக்கின்றார். ஆம் அளம் நாவலிலும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது. பிரதேச மொழியின் போர்வையில் அல்லது அதன் வெளிச்சத்தில் இயலாமைப் பெண்களை முன்னிறுத்தி விட்டுப் போயிருக்கின்றார். அதிலும் கொற்றவையில் எல்லாப் பெண்களின் கண்ணீரும் விழுகின்ற இடமாகட்டும் இன்னும் பெண் உடல் சார்ந்த உடல் வர்ணிப்பாகட்டும் பெண் உடல் மட்டுமே என பார்க்கும் பார்வை வெறுப்பை அல்லது பெண் உடலை எழுதி அல்லது சொல்லிப் பார்ப்பதில் தெறிக்கும் வக்கிரத்தை நமக்கு அடையாளம் காட்டிப் போகின்றது
இன்றைக்கு வாழ்க்கையோ , திரைப் படங்களோ, இலக்கியமோ அரசியலோ எல்லாமே, அதீதங்களாக செய்தி விட்டு அதற்குள் தவறுகளை ஒளித்துக் கொள்வது ஏதுவாகிப் போகின்றது. எதிர் மறை வழிபாட்டிப் பொருளாக ஆக்குவது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல. அஹ்டிலும் இலக்கியத்தில் எழுதப் பட்ட அதீதப் பக்கங்களுக்குள் ஆங்காங்கே வைக்கப் படும் விசத் தூவல்களாய் எதிர் மறைகள் புனிதங்களாக்கிப் பேசுவது நிகழுகின்றது அது அணுகுண்டை விட ஆபத்தான விசயம் இந்த அறிவுத் தளத்தில் நச்சுக் கிருமியை தூவி விடுவது.வாசகர்களின் வாசிப்பு இன்றைக்கு சவாலானது. |
posted by mathibama.blogspot.com @ 2/27/2010 09:16:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment