|
Tuesday, January 11, 2011 |
காலங்களை வென்ற காதல் |
காலங்களை வென்ற காதல் திலகபாமா
உடலின் எதன் வழியாகவும் நீ வெளிப்படுத்தியிராத காதல் கோரிக்கை ஏதுமற்று படுத்துக் கிடக்கிறது மணத்தபடி
உன் சாவுச் செய்திக்கு அப்பாலும் உடல் குளிர்பதனப் பெட்டிக்குள்ளும் பின் மயாணத்தில் எரியூட்டப்பட்ட பின்னிலும் உன் உரையாடல் கசிந்தபடியே இருக்கின்றது
உன் அழைப்புகளை உள்வாங்கிய என் தொலைபேசி அழித்து விட மறுக்கிறது பெயரோடு எண்ணையும்
எழுதி வைத்து விட்டுப் போன வரிகளிலிருந்தும் கிளம்பி எழுகின்றது நினைவலைகள்
உடலற்று உணர்த்திய காதல் நீ உடலற்று போன பின்னும் உலவி வருகின்றது காலங்களை வென்றபடி
நன்றி:www.ithamil.comLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 1/11/2011 07:19:00 pm |
|
1 Comments: |
-
காதலின் புதிய வெளிபாடு.... வியப்புடன் பாராட்டுக்கள்.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
காதலின் புதிய வெளிபாடு.... வியப்புடன் பாராட்டுக்கள்.