|
Monday, January 09, 2006 |
தாகம் தீர்க்கும் மணல்கள் |
தாகம் தீர்க்கும் மணல்கள்
விடிகின்ற பொழுதொன்றில் சேவல்களாய் கூவிய இந்திரன்கள் திகைக்க கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர் தெளிக்கத் தேடிய ஜடப் பொருள் காணாது கௌதமனும் சிலையாக
தின்று விடவும் சாபத்தினால் உறைய விடவும் நீங்கள் தீர்மானித்திருந்த நானென்ற என் உடல்தனை அறுத்து கூறிட்டு திசையெங்கும் எரிய சூனியத்தில் திரிந்தலைகின்றன
உடலில்லா எனை தழுவ முடியாது இந்திரன்களும் தலை சீவ முடியாது பரசு ராமன்களும் சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க
சேவல்களால் கூவாத பொழுதிலும் சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும் எனக்கான விடியல்கள் உதயமாகின்றன
ஆறுகள் சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும் நீர்கள் எல்லாம் பரசுராமன் வெட்டித் தீர்த்த உடல்கள் மிதந்தலைய தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்
வெளியெங்கும் என் காதல்கள் நானே தீர்மானித்தாலொழிய பானைகளாகாது சிதறிக் கிடக்க
ஒப்பீடுகள் தொலைத்து உணர முடிந்த கணமொன்றில் உடலாக மட்டுமல்லாது இயற்கையின் எல்லாமாகி மணல்களும் நீர் சுமக்கும் பானையாகி தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் |
posted by mathibama.blogspot.com @ 1/09/2006 11:20:00 pm |
|
3 Comments: |
-
"இனிமுடியாதுன்னால் கருவறுக்க" கவிதையும், இக்கவிதையும் நன்றாக இருந்தன, முழுதாய்ப் பொருள் புரியாவிட்டாலும். நன்றி.
-ஞானசேகர்
-
"நீர் தெளிக்கத் தேடிய ஜடப் பொருள் காணாது கௌதமனும் சிலையாக
நீங்கள் தீர்மானித்திருந்த நானென்ற என் உடல்தனை அறுத்து கூறிட்டு திசையெங்கும் எரிய சூனியத்தில் திரிந்தலைகின்றன
சேவல்களால் கூவாத பொழுதிலும் சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும் எனக்கான விடியல்கள் உதயமாகின்றன
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்
என் காதல்கள் நானே தீர்மானித்தாலொழிய பானைகளாகாது சிதறிக் கிடக்க
ஒப்பீடுகள் தொலைத்து உணர முடிந்த கணமொன்றில்
மணல்களும் நீர் சுமக்கும் பானையாகி தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் "
பாராட்டுக்கள்.
-
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
"இனிமுடியாதுன்னால் கருவறுக்க" கவிதையும், இக்கவிதையும் நன்றாக இருந்தன, முழுதாய்ப் பொருள் புரியாவிட்டாலும். நன்றி.
-ஞானசேகர்