|
Wednesday, January 12, 2011 |
சதுரகிரி கவிதைகள் |
படம் : கஜூரோஹோ சதுரகிரி-1
தன்னைப் பிச்சைக் காரியென்றாள் கல் லிங்கத்திற்கு நீரூற்றினாள் துடைத்தாள் துணி போர்த்தாள்
கிடைத்ததை நிராகரித்து சுவாசிப்பைத் தின்று தீர்த்தாள் காடுகளின் தனிமையில் அவளின் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன தேடிக் களைத்த நீ தோற்க குகைக்குள் தவழ்ந்த படியே அதனிருப்பிடம் சொல்லி அழைக்கின்றாள்
அவள் விட்டெறிந்த காதல்கள் உன் பயன்படு பொருளாய் பெயர் மாற்றி உச்சரிக்கின்றாள்
சொல்லிய திசையில் நகன்று எடுத்து விட்டதாய் இறுமாந்து கொண்டு வந்து அவள் கைகளில் தர வாங்கி மீண்டும் எறிகிறாள் காதலாய் வாசிக்க முடியாது காலாவதியானதை உணர்ந்து
மிரண்டபடி விபூதி பெறும் நீ இப்பொழுது பைத்தியக்காரியென்று விட்டகல
கால் தட்டி விடும் கல்லோடும் கன்னத்திலமரும் பூச்சியோடும் சந்தேகம் கொள் அதுவும் நீ கண்டு விட மறுத்த அவளின் காதல்களாயிருக்கலாம்
சதுரகிரி-2 சிரிக்க மறந்து போகின்றது சிந்தனைகளின் ஆழத்தில் சிக்கிய தினமொன்றிலிருந்து
திருடுகிறவன் தான் என உரத்து உண்மை சொன்ன நிமிட வெளிச்சத்தின் அடியில் கவிகின்றது உன் நேர்மையின்மையின் இருள்கள்
அறைக்குள் அறைந்து கொள் வெளியில் முத்தமிட்டு விடு உன் குரல் மாறிப் போனதின்று அறைக்குள்ளாவது முத்தமிட்டு தொலைத்திருக்கலாமென்று
காதலா, நட்பா, கள்ளமா தேர்வு செய்யச் சொல்லி அனுப்பிய குறுஞ்செய்திகள்
தாகத்திற்கு குடித்த குளிர்பானம் தொட்டுக் கொண்ட ஊறுகாய் கொண்டாட்ட நாளுக்கான சோமபானம் வரிசையில் நிற்க
தூக்கி வந்த முத்தங்களை உருவிலியாக்கி ஏழுமலை ஏறி இறக்கத்தில் கோரக்கக் குகையோடு உலவ விடுகின்றேன்
வந்து போனவரெல்லாம் ஈரம் ஒன்று தழுவியதாய் சொல்லி துடைத்தபடி வெளியில் வர இருள் வெளி சுவாசத்தில் நிறைகிறது உருவிலிக் காதல்களைச் சுமந்தபடி
நன்றி: புதிய பார்வைLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 1/12/2011 06:48:00 pm |
|
1 Comments: |
-
கவிதைகள் மிகவும் அருமை ...
உங்கள் பதிவின் layout நல்லா இருக்கு ..
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
கவிதைகள் மிகவும் அருமை ...
உங்கள் பதிவின் layout நல்லா இருக்கு ..