சூரியாள்

Saturday, May 07, 2011
வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்

வெளி ரங்கராஜன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், பா. அகிலன், திலகபாமா, செங்கதிர், ஜெயமோஹன்

வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்

  • வேரில் தண்ணீர் ஊற்றுவதா?
  • வெந்நீர் ஊற்றுவதா?
  • விமரிசனம் மயிலிறகால் தடவுவது போல இருக்க வேண்டும் .
  • விமரிசனம் முதுகு சொறிந்து விடுவதற்கு...?
  • அந்த எழுத்தாளரின் முகத்திற்கு நேராகவே விமரிசனம் செய்து விடுவேனாக்கும்
  • நான் வாசித்து விமரிசனம் எழுதாத படைப்புகளே கிடையாது , படைப்பாளியும் கிடையாது
  • படைப்பாளி பார்த்து விட்ட உலகை வாசகன் பார்க்க தருபவன்
  • விமரிசனத்தை தாங்கக் கூடியவர் என்பதால்.....

இப்படியாக விமரிசனத்தை சொல்லுவதாய் சொல்லும் போதும் அல்லது கேட்கும் போதெல்லாம் பேசப் படுகின்ற மேற்கண்ட வசனங்களை கேட்க நேரிடுகையில் எனக்கு கேள்வி வருவதுண்டு

விமரிசனம் என்பது என்ன? விமரிசகர் என்பவர் யார்?

விமரிசனம் என்பது மனதால் எழுப்பப் பட்ட இலக்கியத்தை அறிவால் சிந்திப்பது மீண்டும் மனதுக்கு அடுத்த கட்ட நகர்வை பதிவாக்குவது விமரிசனம் என்று ஒற்றை பொருளில் ஒடுக்கிவிட முடியாத ஒன்றாகவும், கலை குறித்த சொந்த அபிபிராயங்களும் கூட வெங்கட் சாமிநாதனின் வார்த்தையிலேயே சொல்லுவதானால் அனுபவத்தின் உக்கிர வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

விமரிசகனுக்குள் படைப்பாளியின் மனநிலையும் படைப்பாளிக்குள் விமரிசகரின் பகுத்தறிவும் ஊடாடி இருப்பது அவசியம்

விமரிசனம் என்பது பிரபலங்களின் கையில் பாராட்டுப் பத்திரம் பெறுவதோ அல்லது மோதிரக் கையால் குட்டுப் பெறுவதோ திருத்தி எழுதுவதற்காக சொல்லப் படுபவையோ அல்ல

பிறகு ஏன் யாருக்காக சொல்லப் படுகின்றது விமரிசனங்கள் ?

படைப்பாளி வாசகன் ஏன் வாழ்வின் ஒவ்வொரு மனிதனும் கலையை அவற்றையும் ஏன் அவரவர் வாழ்கின்ற வாழ்வின் கருத்தியல் இயங்கியல் எல்லாமே கூட ஒவ்வொருவரும் தானே தன் பிரதியை விமரிசித்து பொதுப் புத்தியில் உறைந்து விடாது உயிர்ப்போடு இருக்க வழி நடத்திக் கொள்வதற்கான பழகுதலை விமரிசகர்களின் , விமரிசனத்தின் முதல் தடத்திலிருந்து பெறுவதற்காகவே விமரிசனங்களும் விமரிசனர்களும் தேவையாகவே இருக்கின்றனர்.

முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பது போலவே படைப்புகளிடமிருந்து விமரிசனமும் விமரிசனத்திலிருந்து எதிர் இயங்கியலாக புதிய படைப்புகளும் “நிகழ்த்தப் படுதல் இல்லாது” நிகழ வேண்டும்,

அப்படியாகத்தான் நல்ல படைப்பாளிகள் என நான் கருதும் நபர்களின் அபிப்பிராயங்களீலிருந்தும் அது பொன்னீலன் அவர்களின் ஏகத்துக்குமான பாராட்டிலிருந்தும், கருத்து சொல்லாமலேயே மௌன அங்கீகாரத்துடன் இலக்கிய உலகை உரையாடல்களோடு பரிமாறிக் கொண்டிருக்கும் வெ. சாமிநாதனிடமிருந்தும் பிரித்தெடுப்பவளாய் இருக்கின்றேன்

எனக்கு என் எழுத்துலகை இலக்கிய உலகு என நம்பப் படும் கூட்டத்தினரிடையே அறிமுகப் படுத்தியது லட்சுமி அம்மாள். அவர் வழியாக நான் அறிந்த முதல் விமரிசகர் சி. கனகசபாபதி. அம்மாவிடமிருந்த புத்தகங்களிலிருந்து எனக்கு அறிமுகமாகியவர் வெங்கட் சாமிநாதன் எல்லா ரசனை சார்ந்த கலை அனுபவங்களையும் கொண்டிருந்த அவரது எழுத்துக்களின் முதற் வாசிப்பில் நான் நினைப்பதையெல்லாம் அவர் வேறு வேறு இடமிருந்து சொல்லிக் கொண்டிருந்திருக்கின்றார் என்ற எண்ணம் தந்த ஈர்ப்பு அவரது சந்திப்பிற்கு பிறகு இன்னும் அழுத்தமாகி இலக்கிய நட்பாக தொடருகின்றது

அப்படியான இடத்திலிருந்து வெ. சாமிநாதனின் விமரிசன உலகின் மேல் தீராக் காதலும் விருப்போ வெறுப்போ எப்படியான விமரிசனமாக இருந்தாலும் அதற்கான பெருமதிப்பு உடையவை அவை என்று தீரா தாகம் கொண்ட வாசிப்பை கோருபவையாகவும் இருக்கின்றன அவரது கருத்துக்களின் புதிய பார்வையும் அதைச் சொல்லும் மொழியும்

அவர் நிராகரிக்கின்ற எழுத்தும் அந்த படைப்பாளியே கூட நிராகரிப்பையும் ஏற்றுக் கொள்ல வைக்கும் உண்மைத் தன்மைதான் அவரது மொழிக்கான மரியாதையாக இருந்து வந்திருக்கின்றது.

காலணியாதிக்கத்திற்குப் பிறகு நமக்கு எல்லாமே மேலைத்தேயத்துடனான ஒப்பீடாக மாறிப் போயிருப்பது எவ்வளவுக் கெவ்வளவு அதிர்ஷ்டமோ அவ்வளவுக் கவ்வளவு துரதிர்ஷ்ட வசமுமேவாகவுமே இருக்கின்றது எழுத்து கலை, விமரிசனம் எல்லாமே அதன் ஒப்பீடாகவே சிறந்தது எது என தீர்மானிக்கும் மனநிலை நம்மிடையே இருந்து வந்திருக்கிறது இப்பவும் இருக்கின்றது . அதிலிருந்து விடுபட்டவராகவும், அதே நேரம் அது எதையும் நிராகரிக்காதவருமாகவே வெங்கட் சாமிநாதனின் இடம் இன்று பதிவாகியிருக்கிறது. ஒரு சிலர் சொல்வது போல் விமரிசன மரபு நம்மிடையே இருந்ததான ஒன்றல்ல என்று சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. வேறு வேறு ரூபங்களில் நடன அரங்கேற்றம் காவிய அரங்கேற்றம் அனல் புனல் வாதங்கள் அரசவையின் அங்கீகாரம், இவையெல்லாம் கூட வெவ்வேறு விமரிசன அடையாளங்களாகவே பார்க்க முடிகிறது என்னால்

அந்த வகையில் இன்னூலில் தொகுக்கப் பட்ட கட்டுரைகள் கேட்டு வாங்கப் படாத தன்னிச்சையான கட்டுரைகளை பொறுத்தவரையிலும் வெங்கட் சாமிநாதனைப் பற்றிய பல்வேறு பிம்பங்களைத் தந்து போகின்றன.

அதாவது சுந்தர ராமசாமியின் கட்டுரையில் கநாசுவுக்கும், வெங்கட் சாமிநாதனுக்குமான வேறுபாடுகள் பேசப் படுகின்றன.

கநாசுவைத் தாண்டி வளரும் ஆரம்பம் வெங்கட் சாமிநாதன்

கநாசு அலசலோடு முன் வைப்பவர்.

வெங்கட் சாமிநாதன் குத்துமதிப்பாக விமரிசனத்தை வைப்பவர்

கநாசு நேற்றைய உன்னதம் இன்றைய வெருமை பற்றிப் பேசுபவர்.

வெங்கட் சாமிநாதன் எல்லாமே சூன்யம் என்பவர்

கநாசு முடிவுகளுக்கு விளக்கம் சொல்லுபவர், வெங்கட் சாமிநாதன் முடிவுகளை மட்டுமே வலியுறுத்துபவர் என்று சொல்லிப் போகும் சுந்தர ராமசாமி ஒரு இடத்தில் தன் முரணை தவிர்க்க முடியாது வெளிப்படுத்துகின்றார்.

வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம் விரிவானது ஆழமானது என்று சொல்லும் அவரே அவரது விமரிசனத்தில் வாதமும் விளக்கமும் போதுமானதாக இல்லை என்கிறார்.

விட்டல் ராவ் தன் கட்டுரையில் படித்ததைப் பார்ப்பதில் தேடுபவரிலிருந்து வேறுபட்டு பார்த்ததை படித்ததில் உணர்கிறார் என்கிறார்

வெளி ரங்கராஜன் இலக்கிய முக்கியத்துவமும் நுண்தன்மையும் கொண்டிருந்தன. கருத்து வேறுபாடுகளோடு இருந்த போதிலும் யாரையும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை என்கிறார்.

பாவண்னன் வியக்கின்ற வெங்கட் சாமிநாதனின் சொல்லாட்சி” அனுபவ ஒத்திசைவு அதன் பின்னாலான கருத்துலகம் முக்கிய கருத்தாக பதிவாகிறது

பெருமாள் முருகனின், கலை கலை அல்லாததுக்குமான விவாதம்

வெங்கட் சாமிநாதனின் விமரிசனம் சாய்வுகள் கொண்டது.

இப்படி இப்படியாக பல்வேறு தரப்பினரும் இதுதான் வெங்கட் சாமிநாதன் என்று சொல்லுவதை வைத்து வெங்கட் சாமிநாதனின் சித்திரத்தை தீட்டுவோமானால் ஒருவர் இல்லை என்பதை இன்னொருவர் இருக்கிறது என்று வேறு வார்த்தைகளில் சொல்லிப் போவதைக் காண முடிகிறபோது தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடிகிறது இவர்கள் சொன்ன எல்லாமே வெங்கட் சாமி


நாதன் தான் என்றாலும் இவையும் கூடத்தானே ஒழிய அவை மட்டுமல்ல இன்னும் அவர்கள் காணாததுமாகவே வெங்கட் சாமி நாதனும் அவரது விமரிசன பங்களிப்பும் இருந்திருக்கின்றது அவருக்குப் பின்னால் இன்னும் அப்படியான இடத்திற்கு கநாவைத் தாண்டிய ஆரம்பம் போல ஆரம்பங்கள் இன்னும் நிகழவில்லை. இன்றோ படைப்பாளிகளேதான் விமரிசகர்களாகவும் இருக்க நேருகின்ற போது வரும் இழப்பு என்னவென்றால் நான் நினைக்கின்ர தொன்றாக இல்லாத படைப்பு தோற்றுப் போனதாக சொல்லிப் போகின்ற எத்தனமும், தன்னைப் போலவே செய்து விட்டாலோ அப்பவும் அவனது இருப்பு பறி போகின்ற பதற்றத்தில்நிராகரிக்கின்ற மனோநிலையும் சாத்தியப் படுத்தி விட்டுப் போகின்ரது, குழு சார்ந்த பட்டியலிடுதலும், வணிக கலாசாரத்தில் எழுத்தும் விற்பனைப் பொருளாவதற்கான விளம்பரமாகவும் விமரிசனங்கல் மாரிப் போகிஇருக்கின்ற சூழலில் வெங்கட் சாமிநாதனைத் தாண்டிய ஆரம்பம் சாத்தியமாகவில்லை என்பது நிஜம்

அந்த நிஜத்தின் வலி உணரும் போது தான் வெங்கட் சாமிநாதனின் இத்தனை ஆண்டு கால இருப்பின் முக்கியத்துவம் விளக்கமாகின்றது நமக்கு, நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல

இக்கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு பெண் கட்டுரையான நிர்மலாவின் கட்டுரை நிறைய ஆச்சரியங்களைத் தந்த கட்டுரையாகும். தனிப்பட்ட முறையில் நிர்மலா அவர்களுடன் அனுபவங்களைச் சந்தித்தவள் என்ற முறையில் இக்கட்டுரையில் அவரின் பங்களிப்பு , இசைத்துறையில் அவருக்கான அறிவு, இசைக்கும் அரசியல் சமூகம் நாடகம் சமூக இன பிரதேசங்களுக்கான அரசியல் குறித்த பார்வை அதை ஏற்கனவே நிறுவப் பட்டுவிட்ட ஆணாதிக்க விமரிசன உலகு கோரும் சாட்சியங்களின் அடிப்படையில் நிறுவுகின்ற பாங்கு என வாக்னர் ஹிட்லர், நீட்சே என பிரம்மாண்டங்களின் பெயர் உதிர்ந்து போய் அதிலிருந்து பெறப்படுகின்ற உண்மைகளே நமை ஆக்கிரமிக்க அதையடுத்து நமது சிந்தனைத் தளத்தையும் இயங்க வைக்கிற மிக முக்கிய கட்டுரை. இக்கட்டுரைதான் மிகச் சரியான எதிர்வினை. வெங்கட் சாமிநாதன் இது போன்ற எதிர்வினைகளுக்காவே எழுதலாம். இந்த எதிர்வினைக்கான வெங்கட் சாமிநாதனின் கட்டுரையும் இதில் பதிவாகியிருந்தால் வாசகன் இன்னும் ஆரோக்கியமான விவாதங்களைப் பெறலாம். அன்த அளவில் மிக முக்கியமான கட்டுரை இது

பாவண்ணனின் வார்த்தைகளில் சொல்வதானால் வெங்கட் சாமிநாதனின் கருத்துலகு பேருண்மையை நோக்கிய நெடும்பயணம் , அப்பயணத்தின் தேவை தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதுவே அதன் வெற்றிக் கான சான்று

ஒரு தனிஆளுமையைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பில் அவருடன் இருந்தேனாக்கும், என்பது போன்ற சுய விவரணைகளையும் தாண்டி நிறைய விவாதங்களையும், நடந்து முடிந்த விவாதங்களின் மீள் பரிசீலனைக்குமான இடமுமாக கட்டுரைகள் அமைந்திருப்பது இதைத் தொகுத்தளித்தவருக்கான பெருமையாக விளங்குகின்றது

Labels:

posted by Thilagabama m @ 5/07/2011 08:59:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates