சூர்ப்பணங்கு திலகபாமா கண்ணன் கோபிகைகளின் பாடுகளை நாடகமாக்க தீர்மானித்தபின் அத்தெருவிலிருந்த தாவணிகளும் முலைகளும் கடன் பெறப் பட்டன நாடெங்கும் நாடகத்தின் ஒப்பாரி ஒலித்து எல்லாரும் அழுது கைதட்டி ஓய்ந்தபின்னும் தாவணிகள் மீளாததை பெண்கள் பாமாவிடம் முறையிட்டனர் யசோதை மறைவுக்குப் பின்னர் குறைகளைக் கேட்கும் உரிமை பாமாவுக்கே ஈந்ததாக மயிர்பீலி நிமிர்த்திய கண்ணனின் நாடகக் கொட்டகையில் அவர்களின் துடைப்பங்களும் உலக்கைகளும் கூட இற்று உலர்வதாக இரவுகளில் தூக்கமிழந்த பாமாவிடம் முறையீடுகளோடு போயினர் நாடக அழுகையின் கைதட்டலில் பாமாவின் சுமைகளின் பாடுகள் பிள்ளைகளின் விரல் பற்றலாய் சுகமாகிய படியே இருக்க நாடக கோபிகைகளின் இரவல் முலைகளில் உண்மையின் தாய்மை உயிர்த்திருப்பதாக நம்பிய பார்வையாளர்களின் வீடுகளிலும் தோள் சீலை இழந்த பெண்கள் உலாவர கண்ணனின் காலடிச் சுவட்டின் திருட்டு வாசத்தை உணர்ந்த கோபிகைகள் நாடக அரிதாரங்களில் மேல் தீ வைக்க வெடித்து சிதறிய சுரைக்குடுவைக்குள்ளிருந்து சூர்ப்பணங்கு எழும்புகிறாள். நாடகத்தை தின்றபடிக்கு Labels: கவிதை |
Post a Comment