|
Tuesday, January 17, 2006 |
சூழ்நிலைப் பாடம் |
கால்கள் ஆயிரமிருந்தும் முதுகெலும்பில்லாது ஊறும் புழுக்களைப் பார்க்கின்றேன்.
முதுகெலும்பிருந்தும் நிமிர முடியாது கூன் போடும் விலங்குகளைப் பார்க்கின்றேன்
எலும்பும் தசையும் இறுகிக் கிடக்கையிலும் சிறகு தூக்கிப் பறக்கும் பறவைகளைப் பார்க்கின்றேன்
கனமில்லாது இலேசாகி இருப்பினும் மூழ்கி வரும் மீன்களைப் பார்க்கின்றேன்
எனக்கு இருந்த கால்கள் எழும்புகள் கனங்கள் இலேசாகுதல் எதை எங்கே நிறுவ தினந்தோறும் நடக்கிறது ஓர் சூழ்நிலைப் பாடம் |
posted by mathibama.blogspot.com @ 1/17/2006 10:56:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment