|
Wednesday, February 13, 2008 |
தாகமோடு காதல்கள் |
தாகமொடு காதல்கள்
கருப்பை வாசல் திறந்து ஈன்றெடுத்த முட்டைகளாய் எங்கெங்கும் தன் உயிர்பை பாறைகளால் நிரப்பிய காட்டாறு பங்குனி வெயிலின் தெறிப்பில் உலர்ந்து கிடக்க
சுவை மறக்காத பாறைகளின் இடை பள்ளத்தில் கசியும் ஈரம்
கொண்டிருந்த தாகம் பங்கு போட்டுக் கொள்ள நானும் நீயும்
சுனையில் வாய் வைத்த நேரம்
நீரில் மிளிர்ந்த கொம்புகள் இரசித்தபடி நீ தனை மறந்து குடித்து முடிக்க வைத்த வாயில் உறிஞ்சாது நானிருக்க நனைந்த உதடுகளோடு தீராத தாகங்கள்
காலியான நீரோடு தீர்ந்து போகாத காதல்களும் |
posted by mathibama.blogspot.com @ 2/13/2008 10:27:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment