|
Thursday, December 24, 2009 |
கவிதைகள் |
மகுடங்களில் என் இரத்தம்
நாட்களின் பெருமதிப்பு பற்றிய உன் ஏக்கம் புரிந்த போது அதை சிதறாது உன் கை சேர்க்க என் விரல்களைத் தந்திருந்தேன்
கூட்டிச் சேகரித்துத் தந்த என் விரல்களில் வழிந்த சிவப்பு நாட்களின் பெருமதிப்பை உனக்கானதாய் மாற்றிய போது உறிஞ்சிய என் நாளின் இரத்தமது
வலியை நான் தாங்கிச் சிரித்ததாலேயே எப்பவும் அகிம்சாவாதியாய் பெயர் சூடிக் கொள்ளும் நீ
இன்னும் மாறவில்லை என் வரங்கள் உன் சாபம் தீர்க்கும் சஞ்சீவியாய் நான் ஆக்கிப் போக கூடிக் கொள்ளும் மகுடங்களோ உன் மயிராக
****************************** நினைவுகளின் மந்தாரை
உன் மொட்டை மாடியில் தொட்டிச் செடியாவதற்கென்று அந்தி மந்தாரை விதைகளை அனுப்பி வைக்கின்றேன்
அதை விதைக்கையில் நினைவு வைத்துக் கொள்
முன்பொரு நண்பனுக்கு இதே போல் அனுப்பியதற்கு அவன் சொன்ன தகவலை
நாளெல்லாம் நீரூற்றியும் முளைக்காத விதை ஒரு நாள் அவன் வீடில்லாப் போழ்தினில் விழுந்த மழைச் சாரலில் நனைந்த மறுநாள் அரும்பு விட்டதாம்
நன்றி புதிய பார்வை கவிதைகள் |
posted by mathibama.blogspot.com @ 12/24/2009 06:32:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment