ஓடு தாண்டியும் வேறூண்ற முடிகின்ற செடியாய் கூந்தல் நீளுகின்றது. சிக்கெடுத்து உதிரும் மயிர் கழித்து விரல்களுக்குள் நுழைத்து நாளெல்லாம் பிண்ணி முடிக்கின்றாள் அம்மா நூறாயிரம் மயிர்களை பிண்ணி முடித்து விட்டு ஆயிரம் கால்சடை பிண்ணியதாய் பெருமை பட்டுக் கொள்கின்றாள் தாழம்பூக்கள் தைத்தாலும் வாசத்திற்கு வந்து விடுகின்றன ஈறும் பேனும் சிக்கெடுத்த சிணுக்கரியினை பயன் படுத்தி பத்திரப் படுத்துகின்றேன் தேயாத ஒற்றைக் காலோடு எப்பவும் பயணிக்கிறது அம்மாக்களோடு வலிக்கிறது என்று சொன்னாலும் பின்னுவதை நிறுத்தப் போவதில்லை அம்மாக்கள் அம்மாவின் விரல்கள் தளர என் விரல்கள் அம்மாவாகி விடுகின்றது
நன்றி அமுதசுரபி தீபாவளி மலர்
Labels: ததை |
சாதாரணமாய் பேசுகிற அசாதாரணமான கவிதை இது.