|
Thursday, June 25, 2009 |
இரு சமன்கள் |
வீழ்த்துவதற்காகவே பயிற்றுவிக்கப் பட்ட அடிமைத் தனங்களை நேசத்தின் காரணமிட்டுக் கூட உலாவர விடாத வானமொன்றிருக்க வெட்ட வெளியின்று உணர்ந்திருந்த இடத்தில் நீர் மேகமென உருமாறிக் கிடக்கு நிரம்பியிருப்பதை உன் மனம் நிராகரிக்கும் படிக்கு
நான்கு விரற்கடை குட்டையானவளிடமே வாழ்ந்து பழக்கப் படுத்தப் பட்ட கூண்டுப் புலியாய் நீ
இரு சமன்கள் சுகமான பயணமென
வாசிக்க முடியா புது மொழி என்னிடமிருக்க பழகிய மொழிதலூடாகவே அர்த்தப் படுத்திக் கொள்கின்றாய் “ காணவில்லை காதலென்று” நன்றி:www.thadagam.com |
posted by mathibama.blogspot.com @ 6/25/2009 10:26:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment