|
Friday, May 08, 2009 |
கவிதை |
கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை திலகபாமா
வன்முறை குண்டு துளைப்பும் குருதி இழப்பும் மட்டுமல்ல
என் அன்பின் சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு நீ திருப்பித் தராததின் வலியைச் சொன்னால் நிராகரிக்கும் உன் இயல்பில்
யாருமற்ற ஏதுமற்ற அகதி வாழ்வின் வலியும்
எனை கெட்டிக் காரியென சொல் தூவி உனக்கானவளாய் மாற்றிக் கொள்ளும் தொடர் வாழ்வில்
பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும் மூச்சுத் திணறலின் வலியும் வன்முறைதான் நன்றி .திண்ணை.காம்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/08/2009 12:32:00 pm |
|
2 Comments: |
-
//பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும் மூச்சுத் திணறலின் வலியும் வன்முறைதான்// உண்மைதான்..
-
//யாருமற்ற ஏதுமற்ற அகதி வாழ்வின் வலியும்//
சொற்களால் வரையறுத்துவிட முடியாதது நாடற்றுப்போதலின் வலி...
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
//பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும்
மூச்சுத் திணறலின் வலியும்
வன்முறைதான்//
உண்மைதான்..