|
Monday, April 13, 2009 |
குருதிப் பற்கள் |
குருதிப் பற்கள் திலகபாமா
போதிமரங்கள் துப்பாக்கிப் பிடியாகிப் போக புத்தர் தேடிய நிழல்களுக்காக
உலாவுகின்ற உடல்களின் உயிர்கள் இலைகளாகித் துளிர்க்கின்றன.
பரி நிர்வாணமொன்று கடல்கடந்து தந்து விட்ட பற்களில் படிந்து விட்ட குருதிக் கறைகளை மறைத்து விட காவித் தோல் போர்த்து வழியும் குற்ற வியர்வையை விசிறிகளால் வீசிய படி நகர
தவம் விட்டெழுந்து உலாத்திய பாதங்களில் தாமரைகள் பூத்த காலங்கள் பொய்யாக அமாசைகள் புத்த பூர்ணிமாவாய் மாறித் தொலைகின்றன.
காலடியில் கயாவின் சருகுகள் மக்கியபடி உரமாகின்றன துப்பாக்கிப் பிடிகளாக மாறாத போதி மரங்களுக்காய் நன்றி புகலி.காம்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 4/13/2009 01:55:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment