|
Sunday, May 03, 2009 |
புத்தகச் சந்தை |
புத்தகச்சந்தை திலகபாமா
விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன
“கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன
தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு திணிக்கப் பட்ட மொழிகள் கருத்தியல்களை வெளித்தள்ளியிருக்க அவை கால்மிதியடிகளின் துளைகளுக்குள் ஒளிந்து கொள்கின்றன
கூடிக் களிக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த நண்டுகள் எழுத்துக் காடுகளுக்குள் மாறி நுழைந்து விட்டதையும் மறந்து முட்டைகளை தொலைத்து விட தேடித் திரிகின்றன மறைவுகளை
இதுவரை உண்மை பேசிய பழமிதழ்கள் கடைகள் கிடைக்காமல் சந்தைக்கு வெளியில் பரத்திக் கிடக்கின்றன விற்க நேர்ந்துவிட்ட கிழவனால்
சமாதானம் உருவாக்க விளைந்த எழுத்துக் காடுகள் தீப்படித்தலைகின்றன
தாகம் தீர்க்கத் தோன்றிய மொழிக் குளங்கள் தற்கொலைகளை மூழ்கடிக்கின்றன
விடுதலையைக் கோரிய சிறகுகள் படுக்கையறைக் கூண்டுகளில் சாட்சியாகிப் போய் விட்டன
விற்று முடித்த மாலையில் புழுக்கைகளையே விட்டு விட்டு நகலும் சந்தையை கூட்டிய படி சிரிக்கின்றாள் குமரித் தோற்றம் தொலைக்கா ஔவை
மூடிய கதவுகளுக்கப்பால் ஒருவனை ஒருத்திகளும் ஒருத்தியை ஒருவன்களும் திருடியதை மறைத்தபடி மகிழ்ச்சியில் மறைவதை பார்த்து சிரித்தபடிLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/03/2009 06:32:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment