|
Friday, June 05, 2009 |
கவிதை |
நினைவலையில் காற்றாலை
நம்மோடு இருந்த நாள் இன்று இல்லாமல் போனது
பிரிய முடியாது பிரிந்த கணங்கள் தேடியும் கிட்டிய பாடில்லை நீண்ட இணைந்த பயணம் இருவரும் தீர்மானித்து முடிவுக்கு வந்து விட்ட போதும் எதிர் எதிர் திசையில்
விடிந்து விட்ட பகலின் வானம் நேற்றைய நிலவின் தடத்தையும் இருளோடு பதுக்கிக் கொள்ள மிச்சமிருக்கின்ற நினைவலைகள் காற்றாலைகளாய்
எங்கும் நிறைந்திருந்த காற்றை இங்கு மட்டும் சக்தியாக்க போகின்ற வழித் தடத்தில் நிகழ்ந்து விட்ட சுகந்தங்களில் வேரூண்றி நின்று போகின்றேன்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 6/05/2009 08:48:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment