|
Sunday, May 24, 2009 |
கவிதை- |
வீழும் வாழ்வு திலகபாமா
நிலம் கீறி உண்மைகளை விதைத்துக் கொண்டிருந்த அவளோ எப்பவும் வறுத்துக் கொண்டிருக்கின்றாள் நாளைய விதைகளின் நீர் சத்தை உறிஞ்ச விட்டபடி உனக்கான சாப்பாட்டுக்காய்
கண்ணாடிக் கூடுகளுக்குள் பாதியில் நிரம்பியிருந்த பொய்களை மீதி உண்மைகளைச் சொல்லி நீ விற்கத் துவங்கிய சுருக்கிய இடங்களுக்குள் எனக்கான இடத்தை காலி செய்திருக்கின்றாய் நான் உள்வர விரும்பவே முடியாத படிக்கு
வாழ்க்கை முடிகின்ற இடத்திலிருந்து எனை நீ சேர்த்துக் கொள்ள நினைக்க
நானோ எப்பவும் உன்னிலிருந்தே துவங்க வடக்கு தெற்கு முரண்பாடுகளூடாகவே ஈர்த்துக் கொள்கின்றோம்
மலையும் பள்ளத்துக்குமிடையில் வீழுகின்ற அருவியாய் எனக்கும் உனக்குமிடையில் வாழ்க்கை வீழ்ந்தபடியே வாழுகின்றதுLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/24/2009 10:39:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment