|
Saturday, May 16, 2009 |
கவிதை |
உயிரோடு மரணம் தழுவ திலகபாமா
இதுவரை நீ தின்று செரித்த வெளிச்ச இரவுகள் நடந்து கொண்டே வாழ்ந்ததாய் நிறுவிய இருள் பகல்கள்
நட்டதாயும் வளர்ந்து கிளை விரித்தாயும் நிறுவிய புனைவு நிஜங்களை சொர்க்க மென வாசித்த உன்னிடம்
இதுவரை இல்லாதிருந்த சொர்க்கம் கட்டி வைத்து காத்திருந்து வாசிக்க சொல்லி சொர்க்கமென வாசித்துவிடுவாயென நம்புவது நியாயமில்லைதான்
திரிசங்கென என் புதிய வார்த்தையின் முன் பாடம் நடத்தும் நீ தோற்க நான் தொட முடியாததாய் சொல்லித் திரிகின்றாய்
மரண அடிகள் தந்து விட விரும்பாது உயிரோடு சிறைப்பிடிப்பேன் தினம்தோறும் நீ மரணத்தை உணர்வோடு தழுவLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/16/2009 11:58:00 pm |
|
3 Comments: |
-
-
திரிசெங்கு சொர்க்க நிலையா ...
-
வணக்கம் சூரியாள்
\\நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\\
ம்ம்ம் உங்களை படித்திருக்கின்றேன்
இராஜராஜன்
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
அட நம்ம ஊர்க்காரய்ங்க