|
Tuesday, June 16, 2009 |
கவிதை |
பெயரிலி நதி திலகபாமா
காலம் காலமாய் கமண்டலத்தில் அடக்கியவர்களும் விரித்து விட்ட காக்கைகளுமே வரலாறாக ஓடிக் கொண்டிருந்த நதி பெயரிலியாக தன்னை மாற்றிக் கொள்கின்றது.
சிக்குவதற்கும் விரிப்பதற்கும் அடங்காத ஒன்றாக நான் மாற உன் பேசப் படு பொருள்களிலிருந்து தொலைந்து விடுகின்றேன்
தொலைந்து விடுதல் உன்னைப் பொறுத்தவரை வரலாறாவதில்லை எனக்கோ வாழ்வாகின்றது. ********************************************
சிம்ம வாகினி
அரங்கத்தில் மையத்தில் பதினாறு திசையும் காதலிக்கவும் காதலிக்கப் படவும் கூடிய கலையாய் நானிருந்தேன்
சிம்மாசனச் சிலைப் பதுமையாய் சிலரும் என்னில் கலை உறிஞ்சும் கட்டில் பதுமையாய் கட்டி விட பலரும் பார்க்கையில்
ஒளி இருந்தும் இல்லாமலிருக்கும் கருவறைக்குள் எனை இருத்திக் கொண்டேன் நான் விரும்பிய காதலை நீ தேடிக் கொண்டிருக்க அது என் முன் சிம்ம வாகனமாய் உருமாறி அமர்ந்திருந்தது.
நன்றி : வடக்கு வாசல்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 6/16/2009 09:36:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment