தனிமை
மூடை
திலகபாமா
கருவறை
இருளிலிருந்து
என்னோடவே
இருந்து வருகிறது
தனிமை
என்றொரு மூடை
என்
கைவலியை கண்டொருவன்
உள்ளிருப்பது
பொக்கிசங்களென
புரளி
கிளப்பிப் போகின்றான்.
நான்
அசந்த வேளையில்
அது
அவனால் காணாமல் போகக் கூடும்
தளர்ந்து
விட்ட பொழுதினில்
இறக்க முடியா பாவ மூட்டையென
இரக்கமோடு
வாசித்து விடுவோருமுண்டு
மூடிய
துணிகளுக்கப்பாலிருக்கும்
இரகசியங்களை
திறக்கும்
சுவாரசியமுடையோரும் உண்டு
அதற்குள்
சின்ன விதை தூக்கி பறக்கும்
பட்டுச்
சிறகுகளும் உண்டு
தேய்ந்து
உருண்டுவழவழப் பாகிப் போன
கற்களும்
உண்டு
கால
துயில் கலைதலில்
பெருமானங்கள்
மாறிப் போக
விலைமதிப்பற்றதாகலாம்
அதுள்ளிருந்தவைகள்
எதுவும் ஒருநாள்
எனது
தோள்களோ
சுமையில்லாது
நடக்கப் பழகாததாலேயே
ஏந்தியபடி
நடக்கிறது
நைந்து
கிழியும் வெளித் தோற்றத்தை
அவ்வப்
போது மாற்றிய படிக்கு
உள்ளிருக்கும்
தனிமை தொலையாது
காலடியில்
பின்னோக்கியபடியே
மண்
மறைகிறது
பிதுங்கி
வழியும் கூட்டத்தில்
எனக்கான
வழியாய்
மாறிப்
போகிறந்த மூடை |
Post a Comment