|
Wednesday, January 18, 2006 |
யார் குற்றம்? |
கசிந்து கிணுகிணுத்த கால் கொலுசாய் ஓடிய ஊற்று பெய்கின்ற மழையில் கூடுகின்ற நீரின் சங்கமத்தில் உடை படுகின்றன கரைகள்
பூக்களோ பிணங்களோ எது மிதந்த போதும் நாற்றங்களை கரைய விட்டு கலங்கல்களை காலடியில் நசுக்கி தாய்ப்பாலாய் ஓட
பிட்டுக்கு மண்சுமந்த பரமசிவன் பரம்பரையில் நாங்களும் சுமக்கின்றோம் பிரேதங்களை நீரில் விடப்பார்த்திருந்த பாவங்களை
சுமக்காத மண்ணுக்காய் கண்ணயர்ந்த காரணங்களுக்காய் விழுகின்ற சவுக்கடிகள் விடியலுக்குச் சொல்லும் புது வெள்ளம் நதிகளின் குற்றமல்ல கரைகளை முழ்க விட்டு பார்த்திருந்தவர் குற்றமென்று |
posted by mathibama.blogspot.com @ 1/18/2006 08:05:00 am |
|
3 Comments: |
-
அருமை..இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்களிருந்தும் இயற்கை அதன் சக்தியை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சுகா
-
-
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
அருமை..இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்களிருந்தும் இயற்கை அதன் சக்தியை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சுகா