|
Thursday, November 16, 2006 |
கவிதை |
போகசக்தி
எனக்கென்று எப்பவும் பயிர் வளர்க்கின்றேன் ஆசை ஆசையாய் புதுமுளை வாசத்தில் மகிழ்ந்து குழந்தை தழுவலில் கரைந்து பூ விரிந்து மணம் எனக்குள் கரைய வழியும் தேன் என் விரல் நனைக்க சிலநேரம் அதன் நிழலில் குளிர்ச்சியாலும் காதலெனும் பெயரோடிருக்க
எனைச் சிறைவைக்க சந்திரன்கள் நினைக்கையிலெல்லாம் என் பயிரைக் குறிவைக்க தூரப் போகின்றேன் இது எனதல்ல என்றுணர்த்தி
இப்போ நானும் சுதந்திரமாய்
நான் வளர்த்த கன்று நூறாவது தலைமுறைக்கு சுதந்திரங்களை விளைவித்துக் கொண்டிருந்தது போகசக்தியாய்
வானும் நிலவும் சேர்ந்திருப்பதாய் பலர் சொல்லித் திரிய என்னோடு நெருக்கமென்று நிலவும் காண்பித்து திரிய நானோ எப்போழுதும் தூரத்தில் நிலவோடும் ஒட்டாது |
posted by mathibama.blogspot.com @ 11/16/2006 09:49:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment