|
Wednesday, August 23, 2006 |
பெரு வெடிப்பு-கவிதை |
பெரு வெடிப்பு
மணல் வெளி விரல்கள் கோடிழுக்க இழுத்த நேர்கோட்டிற்கான புரிதல்கள்
விரலை தட்டி விடும் கற்களைப் புறந்தள்ளி அலுங்காது இழுத்த கோட்டில் ஸ்திரம் காணக் கிடைத்ததாய் நான் சொல்ல
வட்டங்களை சிதைக்க வந்த கருத்தியல் கொண்டு வந்ததாய் கோடுகளின் நிறம் மாற்றி பேசும் நீ
புரியாமல் போனதை சொல்ல எழுந்து வரும் உன் கோபங்களை புரியாமைக்கான சாட்சியங்களாய் உன் முன் நிறுத்த வட்டம் , கோடு எல்லாம் தொலைத்து மணல் வெளியெங்கும் புள்ளிகளாய் சிதறிப் பரவும் நீ
ஒவ்வொரு பெரு வெடிப்பின் பின்னும் ஒன்று திரளும் கோளாய் புள்ளிகளிலிருந்து புறப்பட்டுக் கிளம்பும் நான்
இருளாய் பகலாய் மலையாய், கடலாய் பசிய புற்களாய் , பாறைகளாய் எதுவாய் நீ அடையாளப் படுத்திய போதும் இதுவெல்லாம் உள்ளடக்கிய நீ கண்டு விட முடியாத ஒன்றாக நான் |
posted by mathibama.blogspot.com @ 8/23/2006 09:37:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment