சூரியாள்

Sunday, June 25, 2006
டார்ஜிலிங் பயணம்-5

கஞ்சன் ஜங்கா அருவி

காஞ்சிபூரி ஏரி அருகிலிருக்கும் புத்த மானஸ்ட்ரி


ரிம்பி அருவி

காஞ்சிபூரி ஏரி

மூங்கில் கொடிகள்
பெல்லிங் எங்கும் புத்த மத அடையாளங்கலான மூங்கில்கள் கொடிகளோடு பறந்த வண்ணம் இருக்கின்றது. சந்தோசமான நிகழ்வு துக்ககரமான நிகழ்வு எல்லாவற்றுக்கும் அதை வீட்டின் முன்னாலும் சிலவேளைகளில் ஊரின் எல்லையிலும் ஊனப்படுகின்றது.பெல்லிங்கிற்கு பேருந்து வசதிகள் கிடையாது. பெரும்பாலான இமயமலை சிகரங்களுக்கூடான இந்த சிற்றூர்களுக்கு பேருந்து வசதி இருப்பதில்லை. மாருதி வேன்களும் டாடா சுமோக்களும் மட்டுமே ஒரே மார்க்கம். சாலை வசதிகள் கூட இப்பொழுதுதான் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.போகின்ற பாதை கஷ்டப் பட்டு கடக்கக் கூடியதாய் கரடு முரடானதாய் இருக்கின்றது. ஒரு பக்கம் எப்பவும் கிடு கிடு பள்ளம் கூடவே வந்து பயமுறுத்திப் போகின்றது. “ரிம்பி “அருவிக்கு போகின்றோம்.இது கோடைக் காலம் அவ்வளவாக தண்ணீர் இல்லை என்றாலும் அழகு குறையாது வீழ்ந்து கொண்டிருக்கின்றது. ரிம்பி என்பது அங்கிருக்கும் மலை வாழ் மக்களின் மொழியான சுபா மொழியிலிருந்து வந்த பெயர். எங்களுடன் வந்த ஓட்டுநர் நானும் என் குழந்தைகளும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு நெகிழ்ந்து போகின்றான்.தனக்கு தாய் தந்தை இல்லையென்று தனக்கு தெரிந்த கொஞ்ச ஆங்கிலத்தில் சொல்ல, அவனது பெயரும் திலக் என்று சொல்ல நேபாளியில் அதன் பொருள் என்னவென்று கேட்க நெற்றியில் கைவைத்து பொட்டிட்டு காண்பிக்க தெற்கே இருந்து வடக்கு வரை ஒரே பொருள் தொனிக்கும் வார்த்தைகளும் இருக்கின்றன. எங்களோடு நேசமாகிக் கொண்டு விட இன்று வரை அந்த நட்பு தொடர்கின்றது. அங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாருக்கும் நிலம் இருக்கின்றது. தேவைக்கு அதிகமாக விளைவித்தால் விற்பதற்கு சந்தை எதுவும் கிடையாது. ஏலக்காயே எந்த வித பாதுகாப்பும் இன்றி வேலிகளில் காய்த்துக் கிடக்கின்றது. அதோடு கரடு முரடான பாதைகளிலும் கவனமாக ஓட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். சில இளைஞர்களைக் காண நேர்ந்தது கையில் கிதாருடன் நேபாளி இனத்து பாடல் இசைத்தபடி. சுகமான வாழ்க்கைதான்
(khecheopari lake)காஞ்சிபூரி ஏரி இது புத்த மதத்தினரின் புண்ணிய குளமாக கருதப் படுகின்றது நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் ஏரி இருக்கின்றது. அடர் வனம் போன்ற பகுதிக்குள் சிறிது தூரம் நடக்க ஏரி கண்ணிலேயே தென்படவில்லையே என்று நினைக்க வைக்கும் தோற்றம். ஒத்தையடிப் பாதையெங்கும் எழுத்துக்கள்( என்ன மொழி?) பொறிக்கப் பட்டிருக்க , கொஞ்ச நேர நடைக்கப்புறம் ஏரி தென்படுகின்றது.பலகைகளால் போடப் பட்டிருக்கும் மரப் பாலத்தின் இருபக்கமும் தகரத்தாலான உருளைகள் இருக்க உருட்டிவிட்டபடி நகலுகின்றோம் ஏரிக் கரையில் பூஜைகள் செய்ததற்கான அடையாளங்களுடன் பூக்கள் சூலம் எல்லாம் இருக்கின்றது.அங்கிருந்து கஞ்சன்ஜங்கா அருவி போகின்றோம் மிக உயரமான அருவியாய் அது இருக்க, அருவியில் தெறிக்கும் திவலைகளில் நனைந்து விட்டு மதிய உணவிற்கு மீண்டும் பெல்லிங் திரும்புகின்றோம்
posted by mathibama.blogspot.com @ 6/25/2006 03:22:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates