|
Friday, June 16, 2006 |
டார்ஜிலிங் பயணம்-2 |
ஹௌரா பாலம்
செம்பருத்தி பூக்கள் மாலையாக
கோமதி விலாஸ் தமிழர்கள் விரும்பிச் செல்லும் விடுதி. எந்நேரமும் தமிழர் உணவு கிடைக்குமென்பதால். ஆனால் விடுதியோ பழைய தோற்றத்தில். மிகப் பெரிய அறைகளாக இருந்த போதும், ஒரு வித தயக்கம் தரும் தோற்றம். காலை 6 மணிக்கு எழுந்து கிளம்பி மதியம் கல்கத்தாவிலிருந்து பாஹ்டோக்ரா செல்லும் விமானம் 1.30 மணிக்கு என்பதால் வேகமாக சில இடங்களையாவது சுற்றி வந்து விட விரும்பிப் போகின்றோம். முதலில் காளி கோவில். வழி நெடுக செம்பருத்தி பூக்களை கட்டிக் கொண்டிருப்பது ஆர்வம் தருகின்றது. இன்னமும் மிருகக் காட்சி சாலை திறக்க நேரமிருப்பதால் ஹௌரா பாலத்தை வாகனத்தில் இருந்த படியே சுற்றி வந்தோம். மிருகக் காட்சிச்சாலை அருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஒரு வீட்டில் கொஞ்ச நேரத்திற்கு எனது தொலை பேசியை சார்ஜில் போட வேண்டும் என்று கேட்க அந்த பொழுதுகளில் கண்ட காட்சி . வீட்டுக்கு வீடு 5 அல்லது 6 பெண்கள் முக்காட்டோடு காலை சமையல் வேலைகளீல் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருக்க ஆண்கள் வாசலில் தூங்கிக் கொண்டும். பிள்ளைகள் திண்ணைகளில் உட்கார்ந்து கொண்டும் . எங்கேயும் சுத்தமும் உழைப்பும் இல்லை என்று நினைக்கச் சொல்லும் தோற்றம்.இதற்குள்ளும் மனிதர்கள் தான் வாழுகின்றார்கள் நினைக்க நெஞ்சு வலிக்கின்றது. கூண்டுக்குள் புலிகள் தூங்கிக் கிடக்க, வேடிக்கை தைரியமாக பார்த்து வருகின்றோம். விக்டோரியா அரண்மனை பார்த்து விட்டு விமான நிலையம் வந்து சேர்கின்றோம் . என் குழந்தைகள் உறுதி எடுக்கின்றார்கள் . திரும்பி வரும் போது கல்கத்தா நகருக்குள் செல்லக் கூடாது என்று
விக்டோரியா அரண்மனை
விமானம் 1.30 மணிக்கு கிளம்பி “பாக்டோக்ரா” வந்து சேர்கின்றது. அங்கிருந்து “காங்டாக் “பயணமாகின்றோம். சூழல் முற்றும் மாறுகின்றது அழகிய இயற்கை காட்சிகள் பசுமையான சூழல் சில்லென்று வீசும் மயக்கும் காற்று
தீண்டித் தழுவி அணைத்துக் கொள்ளப் பார்க்கும் குளிர்
மறுத்தோடும் உடல் வெளித் தள்ளிப் போகிறது வெக்கையின் வேட்கையை
இமயத்தின் கம்பீரமெடுத்து ஓடுகின்ற நதி பாறை தகர்த்து கரை உடைத்து எக்காளச் சிரிப்பிட்டு புவி புரட்டி வருகின்றது
பெண் இறுகி கல்லானதாய் நீர் இறுகி பனியாகிக் கிடக்க இரவு பகல் தொலைதலில் குணம் மாறி வடிவம் மறுத்து மலைச் சிகரம் ஊடறுத்து எம்மைப் போலவே வாழ்வதற்கான போராட்டங்களுடன் குடும்ப உறைதலிலிருந்து முக்காடிட்ட சப்பாத்தி தேய்த்தலுக்குள்ளிருந்து எதிர் திசை ஏகுகின்றது நதி |
posted by mathibama.blogspot.com @ 6/16/2006 08:52:00 am |
|
5 Comments: |
-
ஏங்க.. அப்படி என்ன ஆச்சு ? :-( ரொம்ப நல்ல நகரம்ங்க....
-
>>>திரும்பி வரும் போது கல்கத்தா நகருக்குள் செல்லக் கூடாது என்று <<<
ஏங்க.. அப்படி என்ன ஆச்சு ? :-( ரொம்ப நல்ல நகரம்ங்க....
-
-
படங்கள் இணைப்பதில் எதோ சிக்கல் இருக்கு...சரி செய்தவுடன் இணைப்பேன்
-
நல்ல பதிவு. டார்ஜிலிங் பற்றி இன்னும் அதிக விபரங்கள் தந்திருக்கலாம்.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
ஏங்க.. அப்படி என்ன ஆச்சு ? :-( ரொம்ப நல்ல நகரம்ங்க....