|
Sunday, April 30, 2006 |
எழுத்தாளர் சோமகாந்தன் மறைவு |
எழுத்தாளர் சோம காந்தன்
2005, மார்ச் மாதம் 3 ம் தேதியிலிருந்து , 11 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் இலங்கையில் பெண்கள் தினத்தை ஒட்டி அழைத்திருந்த பத்மா சோமகாந்தன் அவர்களது அழைப்பின் பேரில் போயிருந்தேன். 11 நாட்களும் ஒரு முழு பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்து பத்மா சோமகாந்தனுடன் எப்பவும் உடன் இருந்தார் சோம காந்தன். மகளாய் அவர் அன்பு செலுத்தியதையும், பத்மா அவர்களுக்கு முழுத் துணையாய் இருந்ததையும் அங்கிருந்த 11 நாட்களில் அனுபவித்திருக்கிறேன். அன்னாரின் இழப்பு பற்றிய செய்தி பதிவுகளில் பார்த்து மனம் நினைவுகளை மீட்டுப் பார்க்கின்றது.இலக்கிய வட்டாரத்தில் இணையாக வந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலரே .அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் |
posted by mathibama.blogspot.com @ 4/30/2006 08:20:00 pm |
|
1 Comments: |
-
சூரியாள்
அன்னரின் குடும்பத்திற்கு எனது அஞ்சலிகளும் உரித்தாகுக.
கானா பிரபா
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
சூரியாள்
அன்னரின் குடும்பத்திற்கு எனது அஞ்சலிகளும் உரித்தாகுக.
கானா பிரபா