|
Monday, March 13, 2006 |
கவிதை |
தாட்சாயிணி தாண்டவம்
இற்று விழுகின்றன என் தாலியின் கண்ணிகள் ஆடி ஆடி ஆனது ஆனதென்று சொல்லிச் சொல்லி சொல்லத் தேவையில்லை எனும் தருணத்தில் இற்று விழுகின்றன
அதில் இருந்திருந்த சிவனார்கள் தொலைந்து போனார்கள் ஆடிய ஆட்டத்தில் குண்டலங்களைத் தொலைத்து வென்று விட வழி இல்லாது செய்த என்னுடன் இருக்கப் பயந்து
வலப் பக்கம் நான் தர மறுத்ததை சொல்ல வெட்கி இடப் பாகம் இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய் சொல்லிப் போக
நெற்றிக் கண் நெருப்பு சாம்பராகிப் போனது தாட்சாயிணி தொடங்கினாள் தாண்டவத்தை பாதத்தினடியில்நசுங்கும் பலநூறு வருட சாபங்கள் மேகங்களாய் மழையாகி வெள்ளமாகி கழுவிப் போகப் பார்க்கின்றது உப்புக் கரிக்கும் கடலையும் சேர்த்து
( இந்த மாத கணையாழியில் வெளி வந்தது) |
posted by mathibama.blogspot.com @ 3/13/2006 12:33:00 pm |
|
2 Comments: |
-
// வலப் பக்கம் நான் தர மறுத்ததை சொல்ல வெட்கி இடப் பாகம் இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய் சொல்லிப் போக //
அருமை .
வாழ்த்துக்கள் சுகா
-
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
//
வலப் பக்கம் நான் தர மறுத்ததை
சொல்ல வெட்கி
இடப் பாகம்
இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய்
சொல்லிப் போக
//
அருமை .
வாழ்த்துக்கள்
சுகா