|
Friday, February 17, 2006 |
“நான் பாக்கிய சாலியென்று” |
அந்த சிறு நிலம் எனக்கான தென்று கையளிக்கப் பட்டது விட்டு வெளீயேற முடியா நாளொன்றில் தாகம் தவிக்க தாங்காது என் கைகள் பூமி பறிக்கும்
தண்ணீர் கண்டு விட மனம் வெறி கொண்ட வேளையில் என் வளைகள் ஒடி பட்டன தோண்டிய மண் தூக்கி நடக்க கால் சங்கிலிகள் அறுபட்டன
எல்லைகளும் மறந்து போன பொழுதொன்றில் நான் ழக் கிடந்தேன்
என் அடிகள் தாங்காது பிழந்த பூமி என் கை இரத்தம் துடைக்கவென நீர் தந்தது
சிவப்பேறிய நீர் நிறைந்து ஓட தோண்டிய கேணியைச் சுற்றி பசுமைகள்
எல்லாம் முடித்து நான் கரை ஏற
வானில் இருந்து மண் வீழுகின்ற துளிகள் சொல்லும் “நான் பாக்கிய சாலியென்று”
என் வலிகளின் அடையாளங்களை காணக் கிடைக்காது கழுவிப் போகும் நீர்
என் கைகள் மண் தந்த பூக்கள் ஏந்த இல்லாத நகக் கணுக்கள் தெறிக்கின்றன வலியில்
பழக்கத்தில் நான் மறந்து போன தாகம் என்னாளும் தீர்க்கப் பட முடியாததாய் |
posted by mathibama.blogspot.com @ 2/17/2006 09:35:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment