|
Saturday, January 28, 2006 |
மனவெளிப் பயணம் |
வடக்கு வாசலில் கட்டுரையோடு வந்திருக்கும் பெட்டி செய்தி
பெண்கள் சந்திப்பு , லண்டன் அக்டோபர்15, 16 நடந்த பெண்கள் சந்திப்பு , இந்த முறை இராஜேஸ்வரி அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டு ஒருங்கிணைக்கப் பட்டிருந்தது. இலங்கை கனடா இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கல் வந்திருந்தனர். ஓவியர்கள், எழுத்தாளர்கள், இயக்கம் சார்ந்த பெண்கள் இப்படி எதிலும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ளாதவர்களும் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்த இருபது பேர் மறுநாள் நிகழ்வு முடிவின் போது 50 பேர் வரை வளர்ந்திருந்தது. இந்நிகழ்வில் முக்கிய விடயம் பெண்களின் எழுத்து ஓவிய படைப்புகள் தாங்கி வெளி வந்திருந்த சந்திப்பு மலர் ஆகும் பல்வேறு தளத்திலிருந்து படைப்புகளை தாங்கி வந்திருந்த போதும் புலம் பெயர்ந்த பெண்களின் படைப்புகள் ( அவர்களுக்கு அவர்களாலேயே உருவாக்கப் பட்டதளம் என்பதாலும், வருடந்தோறும் சில தமிழ் நாட்டு பெண் படைப்பாளிகளின், படைப்பு என்னதும் வந்திருந்த போதும் ) இடம் பெற்றிருக்கின்றன.மேற்கத்திய கலாசாரத்திற்குள் வந்து விட்ட போதும் இரு படகுகளிலும் சவாரி செய்ய நினைக்கும் மனநிலையில் போலித்தனங்கள் நிறைந்து வாழ எத்தனிப்பது படைப்பின் வழி நிதர்சனமாக தெரிந்தது.பொதுவான இலக்கிய அமைப்புகளில், ஆண்கள் ஆக்கிரமித்து விடுகின்ற மேடை அரங்கு போன்ற தயக்கம் தரும் சூழலிலிருந்து விடுபட்டு எல்லாரும் எல்லாமும் பேசி, பகிர்ந்து கொள்வதாக நிகழ்வு இருந்தது. மருத்துவர் கீதா பேசிய விசயங்களின் பின்னிலும் பின்னால் நடந்த சில விவாதங்களின் போதும்” இதைக் கேட்கவா கனடாவிலிருந்து வந்திருக்கிறேன்” என்று சுமதி ரூபன் சொல்லிய படியே இருக்க அந்த மொழி வழி வந்த அகங்காரம் சலிப்புற வைத்தது பலரையும் |
posted by mathibama.blogspot.com @ 1/28/2006 01:43:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment