|
Monday, January 23, 2006 |
கிறுகிறுத்தே சுழலும் பூமி |
காதலாய் கசிந்ததாய் ஊற்றெடுத்த பிரவாகம் புவியின் மேடு பள்ள தீர்மானிப்பில் நகரத் துவங்கியது
மேடுகள் நதியினை அருவியாய் மாற்ற பள்ளங்கள் குளம் கண்மாயாய் தீர்மானித்தன
அலைகடல் சேரும் வரை ஓயாது நடந்த என் பயணம் சிந்துவதாயும் சிதறுவதாயும் சிலர் தீர்மானித்திருக்க
கல்கொண்டு கட்டிய கரிகாலன் தோற்க புவி தனக்குள் நிரப்பிக் கொண்டது ஊற்றுக் கண்களை யாரும் கண்டு விட முடியா அணைகளாய் மாற்றிய படி
நிறைந்து வந்த குளங்களை தூறோட விட்டு வெறும் பள்ளங்களாய் மாற்றி அணைகளுக்குள் சிறைப்பட்ட நீர் உப்புக் கரிக்கத் துவங்குகிறது ஊற்றுக் கண்கள் புண்களாகிப் போக நிலத்தடி நீர்கள் ஆவியாவதை காணப் பொறுக்காது
நதி நடந்த பாதையில் பூத்திருந்த பூக்களால் நிலமகள் உதட்டுச் சாயம் எழுதிய காலங்கள் கரைந்துபோகின்றன
தாகங்களால் வெடித்த உதடுகள்
நச்சு இலக்கியங்களாய் பெய்து போகிற மழையும் தீர்க்க முடியா தாகமுடன் என்றும் பூமி இப்பொதெல்லாம் கிறுகிறுத்தே சுழலுகிறது. |
posted by mathibama.blogspot.com @ 1/23/2006 05:36:00 pm |
|
1 Comments: |
-
மிகவும் நன்றாக இருக்கிறது. 'நிலமகளின் உதட்டுச்சாயம்' - நான் ரசித்த நல்ல கற்பனை.
-ஞானசேகர்
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
மிகவும் நன்றாக இருக்கிறது. 'நிலமகளின் உதட்டுச்சாயம்' - நான் ரசித்த நல்ல கற்பனை.
-ஞானசேகர்