|
Wednesday, January 18, 2006 |
செரிபடட்டும் |
கூண்டுக்குள் வெட்ட பட்ட சிறகுகளுடன் முன்னால் அளிக்கப் பட்ட நீரும் சோறும் சலிக்க கட்டி விட்ட வளையலில் ஊஞ்சலாடும் கிளிகள்
முன்னிருக்கும் சோறு கிளிக்காகவா? கூண்டுக்காரன் சதை பசி தீர்க்கும் தனக்கே தனக்கான உணவாயிருக்க
வெளியே நின்று கிளிக்காய் கருத்து சுதந்திரக் கூட்டம் நடத்தும் பூனைகள் நரகறி ருசித்துப் பழகி முன்னும் பின்னும் எப்பொழுதும் தின்னுவதற்கு தயாராய் சட்டியை சூடாய் வைக்க நெருப்பு மூட்டப் பார்க்க
கிளி தன் சதை எரித்து காயத்ரி மந்திரம் செபிக்கிறது. சிலுவையில் அறைந்த உடல்கள் இற்றபின் மூன்றாம் நாள் உயிர்க்க
எந்த கறுப்பு அங்கிகளுக்குள்ளும் மறைத்து விட முடியா சுதந்திரம் தான் வைத்திருந்த நெருப்பில் தெரிவதற்காக
சூழுகின்ற தீயில் உடைகின்றன கூண்டுகளின் துகள்கள்
எல்லாரின் நினைவுப் பாதையிருந்தும் சதை ருசிகளை அழித்து சாம்பராக்கி குடித்து போகின்றது உள்ளுக்குள் செரிபடட்டும் கசன்களென |
posted by mathibama.blogspot.com @ 1/18/2006 08:13:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment