|
Monday, March 06, 2006 |
வாழ்த்துகிறோம் |
சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்விக்கு திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி பிப்ரவரி 24 ,25 ஆகிய தேதிகளில் நடத்திய” அறிவியல் தமிழும் கணிணிப் பயன்பாடும் “ எனும் கருத்தரங்கில் நிறைவு விழா நிகழ்ச்சியில் ” சூழலியல் கவிஞர் “ என்ற விருதும்
உலக மகளிர் தினத்தை ஒட்டி பொதுத்துறை நிறுவனங்களின் பெண்கள் அமைப்பு , நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் பிரிவு, எழுத்து மற்றும் சமுதாய சாதனைகளைப் பாராட்டி “ பெண் சாதனையாளர் “ எனும் விருதும்
கவிஞரும் மாசுக் கட்டுப் பட்டு துறையில் பணி செய்பவருமான வைகை செல்விக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. நல்ல பெயர் எடுக்க நாள் செல்லும் என்பது கண்கூடாய் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் , அதையும் தொடர் உழைப்பின் பரிசாய் பெற்று தன் பணிகளில் எழுத்தாய் இருந்தாலும் அலுவலக பணியாய் இருந்தாலும் நிறைவையே வெற்றியாய் கை சேர்த்திருக்கும் வைகை செல்விக்கு, எனது சார்பிலும் பாரதி இலக்கிய சங்க சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றேன் |
posted by mathibama.blogspot.com @ 3/06/2006 11:17:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment