|
Tuesday, June 27, 2006 |
டார்ஜிலிங் பயணம்-6 |
சிங்சோர் பாலம்
பேமாங்கசே அரண்மனை
அரண்மனை முகப்பு
புத்த மானஸ்ட்ரி
பேமாயங்கசே மானஸ்ட்ரி( pemayangtse monastry) சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் இரண்டாவது பழைய புத்த கோவில். 17ஆவது நூற்றாண்டு கோவில் இது.உள்ளேஅழகிய ஓவியங்கள்.வண்ணங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன,இலங்கையில் புத்த விகாரங்களுக்கு போயிருக்கின்றேன்.புத்தர் படுத்த நிலையிலும் இருந்த நிலையிலும் ஒரு அமைதியான சூழலில் இருந்தது அதே நேரம் உள்ளே ஓவியங்களில் இந்திரன் சிவன் பிள்ளையார் ஆகியோரும், புத்த சீடர்களின் ஓவியங்களும் புத்தரின் வரலாரும் இருந்தது. இங்கோ திபெத் மற்ரும் சீனா வின் தாக்களுடனும் நிறைய புனைவு வெளிகளுடன் கூடிய ஓவியங்கள் , மண்டையோடு சுமந்த உக்கிர காளி போன்ற உருவங்கள் சுவர்க்கத்தை குறிக்கும் வானுலகிற்கு படி போவதை போன்ற ஓவியங்கள்,குரு எனும் அடைமொழியுடன்( manifestation of guru padmasambava) பத்து அவதாரங்கள் போல வரிசையாக இருக்க காலடியில் கருப்பும் வெள்ளையுமாக இரு உருவங்களை மிதித்தபடி காளி போன்ற உருவம் இரண்டாவது மாடியில் புத்தகங்கள் அறை முழுக்க, மூன்றாவது மாடியில் “சொர்க்கம்” என்று கோபுர வடிவில் அழகிய மர சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப் பாடுகளுடன் கொலுவிற்கு வடிவமைப்பது போல முதல் மூன்று படிநிலைகளில் நரகமும்மேலே செல்லச் செல்ல சுவர்க்க வாழ்வு குறிக்கும் சிற்பங்களும், சுற்றிய நாலாபக்க சுவர்களெங்கும் ஓவியங்கள். பிரதான ஓவியமாக ஆணும் பெண்ணும் கலக்கும் சிற்பங்கள் திரையிட்டு மூடப் பட்டிருந்தன( இங்கு படங்கள் எடுக்க அனுமதியில்லை).கீழேயும் இருந்த பத்து அவதார சிற்பங்களுக்கிடையே மைய சிற்பமும் அதேபோல கலவியுடனுனான சிற்பமாக இருந்தது.மனிதனின் முக்கிய சக்தியாக அந்த ஓவியங்கள் பிரதானமாகியிருந்தன. அதேநேரம் உடனிருந்த உருவமோ அந்த கணத்திலும் எந்த வித சலனமும் காண்பிக்காது இருந்தது, எதிலும் பற்றற்றிருப்பது போன்று அங்கிருந்து பேமாயங்கசே அரண்மனை போகின்றோம் . பொதுவாக சுற்றுலா பயணிகள் இங்கு வருவதில்லை. இணைய தளங்களில் பார்க்க வேண்டிய் ஐடங்களை தெடியிருந்ததால் அங்கு அழித்துச் செல்ல கேட்டு போகின்றோம்.அழிக்கப் பட்ட நிலையில் சிதிலமடைந்து இருக்கும் அரண்மனையை நெருனங்க ½ கிலோ மீட்டர் நடந்து போகின்றோம்.நடக்கின்ற டதொலைவு சுகமானதாய் இருக்கின்றது.சிக்கிம்மின் இரண்டாவது தலைநகரமாய் பேமாயங்கசே இருந்த போது கட்டப் பட்ட அரண்மனை.இன்று அதன் எச்சங்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன அங்கிருந்து சிங்சோர் பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது சஸ்பென்சன் பாலமிது. இரு மலைச் சிகரங்களை இணைக்கும் பாலமிது. பாலத்தினருகில் இளைஞர்கள் பாடலும் கிதார் இசையோடும் இருந்தனர். தீராத மலைகளுக்கிடையே தீராது போகும் பயணங்களாய் நிரம்பியிருந்த காதல்களுக்கிடையே தீர்ந்து போகும்மனிதர்கள் வந்து போக தேடல்களோடு சிலதையும் கூடல்களோடு சிலதையும் பசியாறியதோடு சிலதையும் சொல்லிப் போகின்றார்கள் தீர்ந்து போனதாய்
சுழலும் புவியின் கடைசி துளி ஈரமாய் எப்பவும் இருக்கும் காதல்கள் நீல நிறம் மரமானதாய் தோற்றம் தரும் இலைகளின் உதிர்தல்களாய் ஆருடம் சொல்லிப் போகின்றன
தின்று விட்டு தீர்ந்ததாய் சொன்ன காதல்கள் சூரியன் உறிஞ்சித் தீர்த்த துளிகளாய் உயிர் மறைத்தே வாழ்கின்றன |
posted by mathibama.blogspot.com @ 6/27/2006 05:38:00 pm |
|
1 Comments: |
-
அழகான படங்கள், பொருத்தமான கவிதை வரிகள், அருமையான வர்ணனை மற்றும் விளக்கங்கள்.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். மேலும் தொடரட்டும்.
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
அழகான படங்கள், பொருத்தமான கவிதை வரிகள், அருமையான வர்ணனை மற்றும் விளக்கங்கள்.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
மேலும் தொடரட்டும்.