|
Tuesday, December 26, 2006 |
கூர் பச்சையங்கள் தொகுப்பிலிருந்து |
“நான்” திலகபாமா
நட்சத்திரக் கூட்டத்திடையே ஒற்றை நிலவாய் என்றும் தனிமையில்
உணர்வில் நேச நெருக்கம் நேர்ந்திட நதி நீரில் “நான்” தொலைந்து நீயாகியிருக்க உனக்கு தெரியாமல் போன என் முகம்
உன்னால் தொலைத்து விடமுடியாத “நான்”கள் நீர் பிடித்து தூக்கித் தாகம் தீர்த்த பச்சை மண் பானைகளோடு கரைத்து போனது என் கனவுகளையும் சேர்த்து
வனைய முடியாமல் போனதற்காய் வாளேந்தும் பரசு ராமர்கள்
காதலில் களைந்து விடும் “நான்”கள் சாத்தியமாக மண்ணிலென்ன கண்களறியா காற்றில் கூட நீர் பிடித்து வருதல் கை கூடிவரும் உனக்கும் எனக்கும் |
posted by mathibama.blogspot.com @ 12/26/2006 11:19:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment