|
Wednesday, December 27, 2006 |
கூர் பச்சையங்கள் தொகுப்பிலிருந்து |
குழலாகும் மூங்கில்கள்
பகிர்ந்து கொள்ளாது தவறவிட்ட தருணங்கள்
அடிநாபிக் காற்று உள்ளிருந்து ஊத கானம் பிறக்கும் என்றறியாது
இட்டு நிரப்பும் முயற்சிகள் ஓட்டை மூங்கிலில் நீரூற்றுதலாய்
மூங்கிலின் தேவை நீரல்ல, காற்று என்றறியும் ஊதுபவன் எச்சில் சுவாசத்தில் பரிசுத்த ஆவியாய் மேய்ப்பவர்களையும் சேர்த்து கிறக்கும் பிறக்கும் வேணுகானம் |
posted by mathibama.blogspot.com @ 12/27/2006 10:51:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment