சொல்லத்தான் நினைக்கின்றேன் திலகபாமா
தொடர்ந்து முந்தைய ஆட்சிக் காலத்திலிருந்து கவனித்து வருகின்றேன் அல்லாது நானே அறியாது என் கவனிப்புக்குள் சிக்கி வருகின்றன, பெண்கள் அரசாங்கத்தோடு கொள்ளும் தொடர்பும் அதன் செயல்பாடும். பெண்ணிய எழுத்தாளராக அறியப் பட்டு பெண்கள் ஒன்று கூடும் இடங்களுக்குப் பேச அழைக்கப் படுக்கின்றதனால் பெண்களின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லப் போனால் ஜனநாயக மாதர் சங்கங்களை பற்றிச் சொல்லாமல் போய் விட முடியாது அவ்வமைப்பின் மேல் மட்ட செயல்பாடுகள் யாருடைய கட்டளைக்கோ செயல்பட்ட போதும் அதன் கீழ் மட்ட பெண்கள் கிராமங்களிலும் ஒன்றியங்களிலும் நிறைய பார்க்கப் படாத பிரச்சனைகளை துணிவோடு கையிலெடுத்து பணியாற்றி வந்திருக்கின்றனர் வருகின்றனர்.சாமான்ய பெண்களாய் சந்தித்து விட முடியாத பிரச்சனைகளை இந்த அமைப்பின் பின் புலம் இருப்பதாலேயே மிக எளிதாக சந்தித்து விடுகின்ற திறமையையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.போன ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இன்னுமொரு மாற்றம் பெண்கள் அதிக அளவில் காவல் துறைக்கு வந்ததும், பெண்கள் காவல் துறையை எந்நேரமும் அணுக முடியும் என்ற துணிவு தந்ததும் அதே நேரம் எப்பவும் கம்யூனிச கட்சி ஆளுகின்ற அரசாங்கத்திற்கு எதிராக செயல் படும் மனோநிலையை தக்க வைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே தாங்கள் அதிகாரத்திற்கு எதிரானவர்களாகவும் மக்களுக்கானவர்களாகவும் சொல்ல முடிகின்ற படியால் அதே மனோ நிலையோடும், அதே நேரம் மறைமுகமாக, அறிவிக்கப் படுகின்ற திட்டங்கள் தின்னப் பட்டு உறிஞ்சப் பட்டு அடி வேர் வரை போய் சேராது பாதியிலேயே வழங்கப் பட்ட எல்லா வளங்களும் தீர்ந்து போவதும் நடக்கின்ற இடத்தில் அதை போராடிப் பெற்றுத் தருவதாக சொல்லிக் கொள்ள இடமளிக்கின்ற அரசாங்க உதவியோடும் தான் வேலை செய்து வருகின்றன.வெளிப் பார்வைக்கு பகையோடும் உள்ளே நட்போடும்
அறிவொளி திட்டங்கள் ,சுயநிதிக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், வளர் கல்வி மையங்கள் என மாறுகின்ற அரசுக்கொரு பெயர் மாறிய போதும் ஒட்டு மொத்தத்தில் ஜனநாயக மாதர் சங்கங்கள் புரட்சிஎன்றும் சாதனை என்றும் பெண்களை பயன்படுத்திய அதே வழிமுறையை சுயநிதிக் குழுக்களும் இன்று வளர் கல்வி மையங்களும் கையிலெடுத்திருக்கின்றன.இவர்கள் பணிகள் என்பது வெளிப்படையாக வரையறுக்கப் பட்ட ஒன்றும் , வரையறுக்கப் படாத பலவும் இருக்கின்றன. பெண்கள் , அதிலும் இதில் முழுக்க இருப்பது கிராமத்து பெண்களே. எளிதாக வேலைக்குக் கிடைக்கின்றனர்.சொன்ன வேலைகளை தலையாட்டியபடி செய்து முடிக்கின்றனர். நீங்கள் உங்கள் ஊரின் தலைவி,அடுத்த ஒன்றியத்தை விட நீங்கள் வேகமாக செய்கின்றீர்கள் என்று பாராட்டாக நாலு வார்த்தை சொல்லி விட்டால் போதும் எதிர்த்துக் கேள்விகள் கேட்பதில்லை( இப்போதைக்கு) சுயநிதிக் குழுக்கள், அரசால் கட்டமைக்க உத்தரவிடப் பட்டது என்றால் ஆட்கள் சேகரிப்பும் கடன் பெற்றுத் தருவதும் வங்கிகள் அரசாங்க ஆர்வலர்களை அணுகுவதும் செய்து கொடுப்பது அரசாங்கமல்லாது வெளி நாட்டு நிதிஉதவியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களாய், நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெறும் ஆளாக இருக்கின்றார்கள் சுய நிதிக் குழுக்களுக்காக ஓடி ஓடி பெண்களைச் சேர்த்து ஒன்று போல சேலை வாங்கிக் கொடுத்து சந்தோசப் படுத்தி விட்டு காசோடு ஓடிப் போனவர்கள் உண்டு ஆனால் 3ஆம் மாசமே இன்னொரு தொண்டு நிறுவன பெயரில் மதிப்போடு உலா வருவதும் ரொம்பச் சாதாரணம்.வளர்கல்வி மையங்கள் அரசாங்க திட்ட மென்ற பொதும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன் நிலையில் நிகழ்ச்சி நடத்தப் பட்ட போதும் ஒருங்கிணைப்பு ஆள் சேகரிப்பு அரசாங்கம் கொடுத்த புள்ளி விபவரங்கள் அடிப்படையில் மையங்கள் அமைப்புக்கு உதவுவது என செய்வது அதே தன்னார்வ தொண்டு( ?)நிறுவனங்கள் தான். இத்தனை நுண்ணரசியல் தாண்டியும் 10 பைசாவுக்கு பேரம் பேசும் பெண்கள் வெறும் விவசாயக் குடும்பத்திலிருந்த பெண்கள் பத்து வரைக்கு மட்டுமே படித்திருந்த பெண்கள் தன் வீடு தன் குடும்பம் , மெகா தொடர்கள் தாண்டி வெளி வராத பெண்கள் எந்த வித அரசியல் பார்வை இல்லாது வெள்ளந்தியாக தாங்களும் வேலையோடு சேவையும் செய்கின்றோம் அதுவும் அரசாங்க சம்பளத்தில் ( குடும்பத்தில் பெண்களுக்கு பெருமையாக சொல்ல இந்த பண மதிப்பீடு அவசியம்)என்று உற்சாகத்தோடு கூட்டம் கூட்டமாக அரசாங்க அலுவலகனஙகளில் ஒன்று சேர்ந்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.
இன்றெல்லாம் “ வெளிநாட்டு நிதியுதவி” என்பது போய் “வெளி நாட்டு முதலீடு” என அரசாங்க அங்கீகாரங்களோடு மாற்றுப் பெயரில் உலா வர துவங்கி விட்ட உலகமய மாக்களின் பிடியில் நாம். 2004 இல் இலங்கை சென்றிருந்த போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கையில் தான் இலங்கையின் ஒவ்வொரு அசைவும் இருப்பதை உணர்ந்திருந்தேன். கூடிய விரைவில் என் ஜி ஓ க்களின் ஆளுமைக்குள் தன்னை தொலைத்து விடக்கூட்டாது நாமும் நம்மை என்ற அச்சம் அரசாங்க அலுவலகங்களை நெருங்கையில் எல்லாம் பயம் வருகின்றது
யார் யார் எதற்காக பயண்படுத்துகின்றார்களோ அதையெல்லாம் தாண்டி இந்த பெண்கள் ஒட்டு மொத்தமாக வெளி வருவதுவும் உழைக்கத் துவங்குவதும் அரசாங்கமோ, தொண்டு நிறுவனங்களிலோ அதில் உழைக்கின்ற பெண்ணிலே நூறு பேரில் பத்து பேராவது வெற்றிகளுக்கு பின்னால் நிற்பதை விட்டு உழைப்பை தங்கள் சக்தியை உணருவதும் வெற்றியாய் தாங்கள் மாறுவதும் அவர்களே அறியாமல் அவர்களை நகர்த்தி விடும் நம்பிக்கை எனக்குள் துளிர்க்கின்றது. ரோம பெரரசின் புதிய அரசன் சான் கமாடஸ் மக்கள் தன் சர்வாதிகார ஆட்சியை உணர்ந்து விடக் கூடாது , தனக்கு எதிராக ஒருவரும் சிந்ததித்து விடக் கூடாது என்று உருவாக்கிய கேளிக்கைகளுக்குள்ளிருந்து தான் அடிமை வீரனாக மாக்ஸிமஸ் உருவாகின்றான் யாரும் எதிர் பாராத தருணத்தில். அசோகன் கலிங்க போரில் வென்ற பிறகுதான் அவன் மனம் தோற்றுப் போனதின் சுவையை ருசித்தது அவனே எதிர் பாரத தருணத்தில் சூத்திரங்களை அரசியல் செய்பவர்கள் வடிவமைக்கின்றார்கள். காலம் யதார்த்ததில் வேறொன்றாய் மாற்றி விதைத்துப் போகின்றது தலையாட்ட பயிற்றுவிக்கப் படும் கரண்டி பிடித்த கைகளில், களையெடுத்த கரங்களில் “கேனான் காமரா”க்கள் ஒளியடிக்கின்றன. யாரும் எதிர்பாரா தருணத்தில் இருளுள்ளிருப்பதையும் ஒளியாக்கி பதிவாக்கி விட்டும் போகும் நம்பிக்கைகளோடு. வெளி வந்த என் காலடியில் நசுங்கிய புற்கள் கால் நகர்ந்ததும் தலை யுயர்த்துகின்றன. எம் பெண்ணும் உயர்த்துவாள் கைகளை வெற்றியின் வாளாக
( பெண்ணே நீ இதழில் வெளி வந்த கட்டுரை) படம்-திலகபாமா |
அட அருமையாக இருக்கின்றதே...எப்படி இந்தளாவிற்கு நுணுகி நுணுகி நுட்பமாக எழுத முடிகிறது...? வாழ்த்துக்கள்...