|
Tuesday, August 28, 2007 |
நீர்க் குமிழிகள் |
நீர்க் குமிழிகள் திலகபாமா
உடைபடாத நீர்க்குமிழிகள் என்னோடு எப்பவும் அருகின் வேராய் தூரிலிருந்து துளிர்க்கின்றன
சுட்டு விரல் நுனியில் கண்ணன் தூக்கிய மலைக் குடையாய் குமிழியின் உள்ளே சிறுதுளிகள்மோதிக் கரைய விடாது காக்க மலைகள் சுமந்த படி
சுமந்த சுமைகளை உணர்த்தாத படிக்கும் உணராத படிக்கும் நீரின் மேலில் நிமிர்ந்த படி உலாவர தோன்றி மறையும் குமிழிகளை பலமில்லாததொன்றாய் சொல்லிப் போகின்றது காற்று
தாரகை சிற்றிதழில் வெளி வந்தது |
posted by mathibama.blogspot.com @ 8/28/2007 11:05:00 am |
|
1 Comments: |
-
வணக்கம் சூரியாள்(அக்கா), புது விதத்தில் புதிதாய் இருக்கின்றது, உங்களின் கவிதை… பணிதொடர வாழ்த்துக்கள்.. நீர்க்குமிழிகள் நிரந்தமற்றவையே…..
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
வணக்கம் சூரியாள்(அக்கா),
புது விதத்தில் புதிதாய் இருக்கின்றது, உங்களின் கவிதை…
பணிதொடர வாழ்த்துக்கள்.. நீர்க்குமிழிகள் நிரந்தமற்றவையே…..