கூசுகின்ற ஒளிகள் திலகபாமா
சிரிப்பொலிகள் வருத்தங்களின் அழுத்தங்களிலிருந்து பீறிட்டு கிளம்புகின்றன ஒலிகளின் பின்னால் மறைந்திருக்கும் என் காயம் பட்ட மனமும் உனை காயப் படுத்த விரும்பா நினைவும்
நீ என்னோடு இருக்க விரும்புவதை நான் தேடி வந்து சாத்தியமாக்க என்னோடிருந்ததை மறைக்க விரும்பி பச்சையமில்லா மொட்டை பாறைகளில் அலைந்து நீ திரிய
காடுகளின் செம்போத்து பறைவைக் கூடாய் கூட்டில் கிடந்த அரிய வேராய் புனைவினோடு திரிகின்றது நம் நெருக்கங்கள்
மொட்டை பாறைகளின் நிர்வாணங்களை கடல் கடந்து காட்சிப் படுத்திட
இருளின் குளிரில் நிலவின் வெளிச்சப் பிண்ணனியில் சுவைத்த சுகத்தை சொல்ல முடியாது மூடி வைக்க நிர்வாணங்கள் நிர்வாணமாகிக் கூசுகின்றன உன் கண்களின் பொய் ஒளியில் முன் நின்றதற்காக (வடக்கு வாசல் இதழில் வெளி வந்த கவிதை) |
சிரிப்பொலிகள்
வருத்தங்களின் அழுத்தங்களிலிருந்து
பீறிட்டு கிளம்புகின்றன
ஒலிகளின் பின்னால்
மறைந்திருக்கும்
என் காயம் பட்ட மனமும்
உனை காயப் படுத்த விரும்பா நினைவும்
ரசித்தேன்...