|
Tuesday, July 24, 2007 |
தொலையும் கருவேல நிழல்கள் |
தொலையும் கருவேல நிழல்கள்
காலடித் தடங்கள் தேடிச் சுவைக்கிறேன் காற்றின் ஒளியை குடித்து முடிக்கின்றேன் காதலிக்கப் படுவதாய் நினைக்கையில் எல்லாம்
ஈரம் கசிகின்ற வார்த்தைகள் கனக்கின்றன நெஞ்சத்தில் சுகமாய்
கூடுகள் சமைத்து குலவிய முட்டைகள் மகிழ்ந்திருந்தது
தேடி வந்திருந்து தலைமுறை வாழ்வை பகிர்ந்ததற்காக
நீர்த்தடம் தொலைத்து கண்மாய் விரிசல் விட்ட நாளில் துள்ளிய கெழுத்திகள் மண்ணோடு உறைந்து போக குச்சிகளால் நிரப்பி உயிர் மூச்சு உள்ளடக்கி நிற்க
காற்றைக் குடித்து காலம் சுமந்து வந்த பறவை கழுகுப் பார்வையில் காணாது போன நீர்த்தடத்தில் கருவேல நிழல் வீழ
நீளப் போகின்றது தேடி வந்தது கிளைகளை அல்ல என்றுணர்த்தி
படம், கவிதை திலகபாமா |
posted by mathibama.blogspot.com @ 7/24/2007 06:34:00 pm |
|
2 Comments: |
-
வாழ்ந்து கெட்ட கூடுகள் தாங்கி நிற்கும் கருவேல மரக்கூடுகள்... வெயில் கீறிய பிளவுகளில் புதைக்கப்பட்ட மீன்களுக்கு சமாதியாக கல்லூன்றப்பட்ட ஊரணி!
-
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
வாழ்ந்து கெட்ட கூடுகள்
தாங்கி நிற்கும்
கருவேல மரக்கூடுகள்...
வெயில் கீறிய பிளவுகளில்
புதைக்கப்பட்ட மீன்களுக்கு
சமாதியாக
கல்லூன்றப்பட்ட ஊரணி!