|
Wednesday, August 29, 2007 |
நூல் வெளியீடு-கூந்தல் நதிக் கதைகள் |
காலை 10. 30 மணிக்கு உமா சங்கரின் உற்சாகமான குரலின் இனிமையோடு நிகழ்வு ஆரம்பமானது.வழக்கமான புத்தக வெளியீடாக இல்லாது இந்த நிகழ்வு முற்றும் உணர்வு ரீதியான வெளிப்பாட்டோடு அமைந்திருந்தது, இந்த கவிதை வாசிப்பாக நடைபெற இருக்கின்றது என்று சொன்னவுடன் எதிர் கேள்விகள் இல்லாது மகிழ்ந்த தருமபுரி அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கோ. கண்ணன் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு தொடங்கியது இந்த கவிதை வாசிப்பை தன்னோடு தொடக்க காலத்திலிருந்து மூன்றாண்டுகளாக உற்சாகத்தோடும் எதிர் பார்போடும் கேட்டிருந்து அதன் வெளியீட்டுக்காக காத்திருந்தவர் லஷ்மி அம்மாள். அவர்களுக்கு தன் முதல் நூலை கையளிப்பதன் மூலமாக தன் அன்பையும் நெகிழ்வையும் காட்ட வேண்டும் என்பதற்காகவே இதுவரை யாருக்கும் நூலை பார்வைக்குத் தராமல் முதல் பிரதியை அவருக்கு இந்த நிகழ்வில் அளிப்பதாக சொன்னார். தொடர்ந்து எழுத்து பயணத்தில் உற்சாகப் படுத்தி வரும் பொன்னீலன் , இந்தக் கவிதையை வாசித்து தன் எண்ண வெளிப்பாடுகளை பகிர்ந்துகொண்ட அமிர்தம் சூரியா, கவிதையோடு எப்பவும் தர்க்கமிட்டு வந்த பா. வெங்கடேசன், அழைப்பிதலில் பெயர் இல்லாமலேயே நிகழ்வுக்கு பார்வையாளர்களாகவே வந்திருந்த பிரம்மராஜன் வெ, எழிலரசு .,இளம் கவி அருள் சோ, தர்மர், தன் கவிதைகளிலிருந்த பாத்திரங்களை உள்வாங்கி நாடகமாக்கிக் கொண்டிருக்கும் விஜயேந்திரா ஆகியோருக்கும் நூலை வழங்கி சிறப்புச் செய்தார்.. அதைத் தொடர்ந்து அவரது கவிதை வாசிப்பு தொடங்கியது. 1.35 மணிநேரம் நிகழ்ந்த அந்த வாசிப்பு அனைவரையும் மனதளவிலும் கூட துளிக்கூட அசைய விடாது கவிதையின் கதையோடும் உணர்வோடும் பயணிக்க வைத்திருந்தது.வாசிப்பு முடிய தொடர்ந்தது கலந்துரையாடல் துவக்கத்தில் அமிர்தம் சூர்யா தன் வாசிப்பில் அநாதி சொரூப கவிதைக்குள் இருக்கும் அக புற கட்டுமான அமைப்பு பற்றியும், தன்னை ஈர்த்த வரிகள் பற்றியும் , முரண்படச் செய்த விவாதங்கள் பற்றியும் பேசினார். பொன்னீலன், எழிலரசு, பா, வெங்கடேசன்,விஜயேந்திரா கவிதை குறித்து தங்கள் எண்ணங்கள பதிவு செய்தார்கள். 3 மணிக்கு நிகழ்வு திலகபாமாவின் நன்றியுரையோடு நிறைவடைந்தது. இளம் கவி அருள் பாண்டிச்சேரி
|
posted by mathibama.blogspot.com @ 8/29/2007 11:27:00 am |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment