|
Sunday, March 30, 2008 |
கவிதை-சிறை வைக்கும் பூக்கள் |
சிறை வைக்கும் பூக்கள்
இஸ்தான் புல் ராஜகுமாரி விதைக்கச் சொல்லிக் கேட்ட டூலிப் பூக்களாய்
நமது நட்பின் விதைகளை ஊரெங்கும் பூக்க மாசி மழைக்காலத்தில் விதைத்து வைக்கின்றேன்
வசந்த காலம் வந்து சேர்கின்ற பொழுதொன்றில் வண்ணங்களோடு பூத்து ஆயிரத்தொரு மனைவிகளுக்கிடையே நீ தொலைக்கப் பார்த்த என் விஸ்வரூபத்தை யாவருக்கும் காணத் தந்து பூக்களின் இதழ்களுக்குள் உன்னை சிறை வைக்கும்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 3/30/2008 11:55:00 pm |
|
2 Comments: |
-
மாசி மாசத்தில எங்கங்க மழை பெய்யுது. இப்ப தான் பங்குனியில தெரியாம மழை பெஞ்சது, குறைந்த காற்றழுத்த தாழ்வின் தயவால.
பெய்யாத மழையைச் சொல்றீங்களோ?
-
என் சிற்றறிவுக்குப் புரிகிற மாதிரியான கவிதைக்கு நன்றி. - பி.கே. சிவகுமார்
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
மாசி மாசத்தில எங்கங்க மழை பெய்யுது. இப்ப தான் பங்குனியில தெரியாம மழை பெஞ்சது, குறைந்த காற்றழுத்த தாழ்வின் தயவால.
பெய்யாத மழையைச் சொல்றீங்களோ?