|
Thursday, April 03, 2008 |
விபத்துப் பொழுதொன்றில்- |
விபத்துப் பொழுதொன்றில் திலகபாமா
விட்டு விடாது நீளப் போகும் சாலையின் தொடாது தொடரும் வெள்ளை கோடுகளாய் நகலும் வாழ்வில்
கூசும் வெளிச்சச் சிதறலோடு முன் வந்து நின்று அச்சமூட்டிப் பார்க்கின்றது தீர்ந்து போதலின் வெற்றிடம்
உதிரும் உடல் உதிர்த்து இறுகி எழும்பும் சுயம்புவாய் உயிர்க்கப் பழகி காற்றோடு கலந்த பின் இல்லாது போகின்ற தருணத்தில் இருக்கின்ற எல்லாவற்றிலும் தன்னை நிரப்பிக் கொண்டு மரணத்தை மரிக்கச் செய்கின்றது உயிர்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 4/03/2008 08:15:00 am |
|
1 Comments: |
-
சிறந்த படைப்பு .வாழ்த்துக்கள்.
அன்புடன் www.kuzhanthainila.blogspot.com
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
சிறந்த படைப்பு .வாழ்த்துக்கள்.
அன்புடன்
www.kuzhanthainila.blogspot.com