|
Tuesday, December 16, 2008 |
கோலத்தின் பூட்டு |
ஏற்கனவே சிதறடிக்கப் பட்டு விட்டன கோலங்கள்
இரத்தம் சிந்தியும் முளைக்காத புள்ளிகளை எப்படியாவது வரிசையில் நிறுத்தி விட முனைகின்றாய் வாசலை வரவேற்கும் படியான ஒன்றாக மாற்ற
நெளிவுகள் புள்ளிகளை வளைப்பதையும் சேர்ப்பதையும் விடுத்து
கலைந்த கனவையும் சேர்க்க முயற்சித்த விரல்களையும் கட்டிப் போடுகின்றன.
எப்பவோ திறக்க போகின்ற சொர்க்க வாசலுக்கு பூட்டாகிப் போனது கலைத்து வீசிய கோலத்தின் துகள்கள்
நன்றி: வடக்கு வாசல்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 12/16/2008 08:34:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment