சூரியாள்

Monday, November 24, 2008
திரைப்படங்களும் பெண்ணும்
திரைப் படங்களும் , பெண்ணும்

நாமே அறியாமல் திரைப் படங்களில் நம் உணர்வுகளைச் சிதைத்து போகும் இன்னுமொரு விசயம் பெண் உடல். இதற்காக கவலைப் பட வேண்டியது பெண்கள் அல்லது பெண்ணியவாதிகள் மட்டுமல்ல. மொத்த சமூகமுமே அதன் பலனை அனுபவித்த வண்ணமே இருக்கின்றது.

பெண் உடலை காட்சிப் பொருளாக்கித் தந்து விடுகின்றது இன்றைய திரைப்படங்கள். திரைத்துறையைப் பொதுவாக சீர்படுத்துவது பற்றி நான் யோசிப்பதே இல்லை அது முழுக்க முழுக்க வியாபாரம். பிழைப்புக்கான வழி. ஒருவர் அதை லட்சியம் என்று எடுத்துச் செய்தாலும் , கூட்டு முயற்சியில் உருவாகின்ற ஒரு படம் தவிர்க்கவே முடியாமல் உடன் வேலை பார்த்த ஒரு பெரிய கூட்டத்தைப் பணத்தால் நிறைவு செய்து விட வேண்டிய பொறுப்பு இருந்து கொண்டே இருக்கும் வரைக்கும் அது வியாபாரம் என்பதைத் தாண்டி கலை உணர்வுக்குள் வந்து விடவே முடியாது என்பது என் அபிப்பிராயம் கலை உணர்வுகளை விற்றுப் பிழைக்கவே அத்துறை பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது . எனவே அதை சீர் படுத்துவது பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் அதைச் சந்திக்கும் மனிதனின் உணர்வுதனை அவனே அறியாது எங்கெல்லாம் தன் காலடிகளை வைத்து சிதைத்து விட்டும் போகின்றது என்பதை அடையாளம் காட்டவே விரும்புகின்றேன்.
ஆபாசம் என்பதற்கு ஆயிரத்தெட்டு வரை முறைகளை ஒவ்வொருவரும் சொல்லக் கூடும் . இயல்பாக இல்லாது வலிய சொல்லப் படும் அல்லது உறுத்தலாக செய்யப் படும் எல்லாமே ஆபாசம் தான்.
ஏற்கனவே இன்றைய பொருளியல் உலகு எல்லாவற்றையும் பொருளாக்கி விற்பனை வியாபாரமாக்கியதில் பெண் உடலையும் உணர்வையும் பொருளாக்கி விற்பனைக்கு தந்து விட்டது என்பதைக் கண்கூடாக சாட்சியங்களோடு பார்க்க நமக்குத் தருவது திரைப் படங்கள். அதனால்தான் பிளேடு விளம்பரத்திற்குக் கூட பெண் உடல் தேவைப் படுகின்றது.பெண் உனைக் காதலிக்க வேண்டுமா எங்களது body spray உபயோகப் படுத்துங்கள் என கூசாமல் கோர முடிகின்றது விளம்பரங்களால்.
இலங்கையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒரு நண்பர் கேள்வி கேட்டார். திரைப்படங்களுக்கு எதிராய் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று?
நான் சொன்னேன், போராட்டம், தார் பூசுவது இதையெல்லாம் விட பெண் உடல் பொருளாக பார்க்கப் படுவதற்கு எதிரான கருத்தியலை உருவாக்க வேண்டும். அதை என் இலக்கியங்கள் கவிதைகள் அறிவுத் தளத்தில் செயல் படுத்தும் என்றேன்.பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்பதும் நிறுவப் பட வேண்டும். இந்த கருத்தியல்கள் இயக்க தளங்களில் இருப்பவர்களால் சுவீகரிக்கப்படும்
ஆனால் அதே திரை நாமே அறியாமல் நமது உள்ளத்து உணர்வுகளை இன்று மாற்றியிருக்கின்றது. பெற்றோர்களுக்கு குழந்தையின் உடலும்,(அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தான்) தம்பதியினருக்கு அவரவர்களது உடலும் தவிர்த்து அந்நிய உடலை பார்க்க நேர்ந்தால் கூசுகின்ற நாம் அல்லது பார்வையை விலக்கிக் கொள்கின்ற நாம், எந்த வித தயக்கமும் இன்றி இன்று திரையில் அதில் வருகின்ற எல்லா உடல்களையும் ஆடைகளைந்து பார்ப்பதை இயல்பாக்கி வைத்திருக்கின்றோம். முன்பெல்லாம் எப்பவாவது வரும் ஆடல்காட்சிகளில் கூட பெண் உடலை பார்க்கக் கூசுகின்ற குடும்பச் சூழல், இன்று தவிர்க்க முடியாமல் படமுழுக்க வரும் அரை குறை காட்சிகளை இது இயல்பு என பார்க்க வைத்திருக்கின்றது. விதி விலக்குகளை எல்லாம் புதிதாய் காண்பிக்கின்றோம் என்று எல்லாரும் அறிய காண்பித்து விடுவதால் எதுவும் தப்பில்லை எனும் மனோ நிலை பொதுப் புத்தியாக மாறுவதற்கு வழி சமைத்து விடுகின்றது.அவர்கள் காண்பிக்கின்ற விதி விலக்குகளை பார்த்து விட்டு எல்லாரும் அதேபோல் இருக்க முயற்சித்து மலினப் படுத்தி விடுகின்றார்கள் அதில் பேசப் பட்ட விசயத்தை
இதனால் எத்தனை மூடி மறைத்தாலும் எப்படி உடை உடுத்தினாலும் காமிராக் கண் வழியாக வக்கிரமாக பார்க்கச் சொல்லிக் கொடுக்கின்ற வேலையை தொடர்ந்து செய்து விடுகின்றன.இது ஆரோக்கியமான போக்கு அல்ல .
3வயதுக் குழந்தைகள் கூட பள்ளியில் நண்பர்களிடையே என்ன என்று தெரியாமலேயே காதல் பற்றி பேசுவதும், பெண் குழந்தைகளை கட்டி அணைத்து காதல் என்று செய்யத் துணிவதையும் பார்க்க நேருகின்ற போது திரைப்படங்கள் எவ்வளவு ஆழமாக சிதைக்கின்றன என்று யோசிக்க வேண்டியிருக்கின்றது.
நாம் தருவது எப்படி இந்த சமூகத்திற்கு போய் சேரும் என்ற கணிப்பு இல்லாது , தீர்மானம் இல்லாது கலைமற்றும் அறிவுத் தளத்தில் செயல் படுபவர்கள் செயல்பட முடியாது. கூடாது.
இதைச் சொல்லும் போது நான் கலாசாரக் காவலராக முத்திரை குத்தப்படக் கூடும்.. என்னைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது மனிதனோடு மனிதன் இணக்கமாக வாழ்வதற்கு நடைமுறையில் உருவாகும் செயல்பாடுகளே அன்றி , வெற்றுச் சடங்குகள் கலாசாரம் அல்ல.அப்படியான கலாசாரங்களை எப்பவும் பேண விரும்புபவளாகவே இருப்பேன். பலர் சடங்கு முறைமைகளை கலாசாரம் என்று நம்பிக் கொண்டு கலாசாரம் எங்களை அடிமைப் படுத்துகின்றது என்று வாதிடுகின்றனர்.. சடங்குமுறைமைகள் கலாசாரம் அல்லவே.

இதில் வெள்ளித் திரை மட்டுமல்ல , சின்னத் திரை இன்னும் மோசமாக இயங்கி வருகின்றது. பள்ளிக் கூடக் காட்சிகள், ஒரு பெண் 4 மாணவர்கள், ஒருவருக் கொருவர் அவளை எனக்கானவள் என்று உடைமைப் பொருளாய் சித்தரிக்கும் நிகழ்வை இன்னும் எத்தனை காலம் “அன்பெண்று” சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். எனக்கென்று வீடு இருக்கின்றது எனக்கென்று ஒரு கார் இருக்கின்றது என்பது போல் எனக்கென்று ஒரு பெண் இருக்கின்றாள் என்று உடைமைப் பொருளாய் மாற்றி விடுகின்ற செய்கைகளை அன்பின் பேராலேயே நிகழ்த்தி விடுகின்றனர்.

என் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் மாணவி( செவிலியர் பயற்சிக்கென வருகின்ற மாணவி) ஒரு நாள் வாசலுக்குப் போவதும் வருவதுமாக வேலை சிரத்தையின்றி இருக்க , அழைத்து என்னவென்று கேட்டேன், முதலில் சொல்ல மறுத்த அவள், தன் காதலன் வாசலில் இருப்பதைச் சொன்னாள். இங்கு எதற்கு வந்திருக்கின்றார். என்று கேட்க. நான் யாருடனும், குறிப்பாக ஆண்களுடன் பேசக் கூடாது என்று சொல்கிறார் அக்கா என்றாள்
அதிர்ந்து போனேன். காதல் தொடக்கம். இதிலேயே என்னைத் தவிர அயலாடனும் பேசாதே என்று சொல்லும் இளைஞன் , அதிலும் அதை வேவு பார்க்க வேலை பார்க்கும் இடம் வரை வரும் இளைஞன், நாளைய வாழ்க்கை பற்றிய பிரமிப்பு எனக்கு வர எடுத்துச் சொல்கின்றேன். அந்தப் பெண் ஒரே வார்த்தையில் சொல்கின்றாள். என் மேல் இருக்கின்ற பாசம், அவனுக்கு மட்டும் தான் நான் என்று சொல்வது எனக்கும் பிடிக்கின்றது என்று. திரைப்படங்கள் தருகின்ற ரொமாண்டிக்கான இந்த நினைப்பிற்குள் இருப்பது தற்காலிகமான சுகமாக இருக்கலாம். ஆனால் யதர்த்தம் வேறு விதமானதாயிற்றே
தான் வைத்தியம் பார்க்க வந்த இடத்தில் அவளைக் காதலித்தது போல் இன்னொரு முறை வேறு யாரும் காதலித்து விடுவார்களோ , அவளும் அதையும் நம்பத் துவங்கி விடுவாளோ என்ற பயமும் அவனை அவளை பத்திரப் படுத்தும் மனோ நிலைக்கு தள்ளுகின்றது.அந்தப் பத்திரப் படுத்தலில் தன் சுயம் தொலைந்து போவதை காதல் அன்பு என்று சொல்லி பூசி மறைக்கப் பார்க்கின்ற ஆண் உலகை வாசித்து விட முடியாதவளாக பெண் இருப்பை வைத்திருப்பதில் இந்த திரைப் படங்கள் மிக முக்கியமான பங்காற்றி இருக்கின்றன.
வித்தியாசமான திரைப்படமாய் கலை இலக்கிய அமைப்புகளாலும் தூக்கிச் செல்லப் பட்ட படங்களும் கூட அப்படியான வாழைப்பழ ஊசி ஏத்தலாய் சில கருத்தியல்களை பெண்ணுக்கு எதிராக செய்து விடுகின்றன. ஆட்டோகிராஃப் எல்லாரும் விரும்பி பார்த்த படமென்பதற்கு அப்பால் ஒரு ஆண் பல பெண்களை நேசிப்பது என்பது இயல்பு என்பதாய் பெண் பொதுப்புத்தியில் நுழைத்து விடுவது துரதிர்ஷ்டமே.
பெண் உடல் மழுங்கடிக்கப் பட்ட வெற்றுப் பொருளாகப் பார்க்கப் படுவதிலிருந்து தவிர்க்க, எமது முன்னோர்கள் தந்திருக்கும் உறவுக்களுக்கிடயேயான புனிதத்தை வெற்றுச் சடங்குகளுக்குள் சிக்காது மீட்டெடுக்க வேண்டியது மிக அவசியம்
உதாரணமாக ஒரு துக்க வீட்டில் உறவை இழந்த துக்கம் தவிர்க்க , இன்னும் பல உறவுகள் இருக்கின்றோம் என்பதை உணத்தவே உறவுகள் வந்து துணி எடுத்துக் கொடுத்து தன் அருகாமையை தெரிவிக்க சொல்லிக் கொடுத்தனர் நம் முன்னோர். ஆனால் துணி எடுத்துக் கொடுத்தலை வெற்றுச் சடங்காக்கி அதில் கௌரவம், ஆணவம் , தன் முனைப்பு எல்லாம் வந்து “ உறவுகளின் அருகாமையை உணர்த்துகின்ற நெகிழ்வுச் சம்பவமே” நிகழ்ந்து விட முடியா தளத்தை இன்று உருவாக்கி இருக்கின்றது
அந்த சடங்கு கலாசாரத்தை தூர எறிந்து விட்டு உறவுகளின் புனிதங்களை பேணும் கலாசாரங்கள் தகவமைக்கப் படுதலும் இன்றைய மனிதம் பேணும் வழிகளாக அமையும்.
நன்றி அதிகாலை.காம்

Labels:

posted by mathibama.blogspot.com @ 11/24/2008 10:00:00 am  
1 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates