|
Tuesday, August 05, 2008 |
நேச நிஜங்கள் |
உனக்கு வேண்டியதைக் கேள் ஆசையைச் சொல் என்றாய் வெளிப்படையான பேச்சு உனக்கும் எனக்கும் தரும் நெருக்கமென்றாய்
காதுக்கிடை கிசுகிசுத்த என் பேச்சுக் கிடை அணைத்தாய் , முத்தம் தந்தாய் வாங்கி வராது போயிருந்த பூவுக்காய் மூவாயிரத்து எழுபத்தொன்றாவது முறையாக நாளை நினைந்து வாங்கி வருவதாக வாக்குறுதியுடனும் தூங்கிப் போயிருந்தாய்
இன்னமும் நிறைவிலாது நான் சொல்லாமல் விட்டது எது தேடல் நான் துவங்க
நடுநிசி ஆந்தை அலறலாய் எனக்குள் அலறியது நீ நீயாய் இல்லாது என் சொற்களின் செயல்பாடாய் போயிருந்த நிஜம்
உன் ஆசைகளோ நான் அட்சய பாத்திரமாய் இருக்க
ஒட்டிக் கொண்டிருந்த ஒரே ஒருபருக்கையளவாவது உன் நேசம்இருக்கின்ற பட்சத்தில் பாத்திரம் மாறும் அட்சயமாய்
வெளிப்படையான பேச்சும் விளங்காத நீ எப்போதுணர்வாய் கேட்டது ஸ்பரிசமல்ல நேச நிஜமென்றுLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 8/05/2008 08:09:00 pm |
|
1 Comments: |
-
என்னங்க உங்க பதிவில் மட்டும் தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் தெரிகின்றனவே என்ன ப்ராப்ளம் என் சிஸ்டத்திலா அல்லது நீங்கள் பதிவதிலா?
|
|
<< Home |
|
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
என்னங்க உங்க பதிவில் மட்டும் தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் தெரிகின்றனவே
என்ன ப்ராப்ளம்
என் சிஸ்டத்திலா அல்லது நீங்கள் பதிவதிலா?