|
Tuesday, September 02, 2008 |
திறப்பின் கூண்டுகள் |
திறப்பின் கூண்டுகள் திலகபாமா
காலம் காலமாய் கம்பிகள் தேய புலியை தனதாக்கியிருத கூண்டு திறந்து கொண்டது
காரணங்கள் கேட்கப் பட்டன புலியிடமும் கூண்டிடமும்
சொல்லாமலேயே பேசப் பட்டுக் கொண்டிருந்தன புலியைத் திறந்து விட்ட கூண்டின் பெருந்தன்மைகள்
புலியின் இரைச்சலும் கழிச்சலும் சகித்திருந்த கூண்டின் இறுதிப் பொறுமையின்மையும்
சும்மாயிருந்த பொழுதுகளில் இரும்புக் கம்பியில் பல் தடமிட்ட புலியின் முரட்டுத் தனங்களும்
இணையாக முடியா கூண்டின் இயலாமைகள் புலி உணர்த்திய தருணமொன்றில் கூண்டின் கம்பிகள் நெளிந்து காற்றின் மோதலில் தூளானதை நம்ப மறுக்கும் கூடாரங்கள் சவுக்குகளோடு அலைய
நடக்கையில் கால் பதியும் மண்ணோடும் ஓடுகையில் துண்டாட முடியா நீரோடும் பாய்கையில் முன் பாயும் காற்றோடும் இருளில் தேடும் விழியில் எரியும் நெருப்போடும் தீர்மானத்தில் இதுதானென முடியா வானோடும்
இணையாகிக் கலக்கிறது புலி
(புதிய பார்வை இதழில் வெளிவந்த கவிதை)Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 9/02/2008 10:13:00 pm |
|
|
|
|
|
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|
Post a Comment