அன்புக்கென்று தந்த பரிசுகள் முதுகில் கீறள் தீற்றிய சவுக்கடிகளாய்
உன் உணர்தலாய் சொல்லப் பட்ட உண்மைகள்
என் நெல்லிக் கனியின் சதையற்ற கொட்டையாயிருக்க அதை விழுங்கிக் கொள்கிறது புதை குழியாய் என் மனம்
அதன் இளக்கத்தில் வேர் கொள்ள மறுக்கும் விதைகளுக்காக ஈரங்களைத் தொலைக்கின்றேன் வெடிக்கின்ற விதையினின்றும் துளிர்க்கின்ற அரும்புகள்லிருந்தும் மரமெங்கும் தொங்குகின்றன சொட்டும் ஈரச் சதையோடு நெல்லிக் கனிகள் யாரும் இனி ஒளித்து விட முடியாத படிக்கு
உடைந்த நீர்க்குமுழியிலிருந்து விடைபெறுகிறது காற்று
ஆகஸ்ட் தீராநதியில் வெளி வந்த கவிதை Labels: கவிதை |
Post a Comment